For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதா கவலைக்கிடம்.. சென்னை, கும்பகோணத்தில் அரசு பஸ் மீது கல்வீச்சு

சென்னையில் இன்று, இரு நகர பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் 15 பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. கும்பகோணம் பகுதியில் 7 அரசு பேருந்துகள் உள்பட 2 தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன.

Jayahealth: Stone pelt on a city bus reported in Chennai

அடையாறில் இருந்து தாம்பரம் செல்லும் அரசு பஸ் மீது மர்ம நபர்களால் கல்வீசி தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பஸ்களின் கண்ணாடிகள் உடைந்துபோயின.

Jayahealth: Stone pelt on a city bus reported in Chennai

சென்னையில் இன்று இயங்கிய 15 அரசுப்பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சாந்தோம் பகுதியில் தனியார் ஐ.டி. நிறுவன பேருந்து மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கல்வீச்சுக்குள்ளான பேருந்து நிலைகுலைந்து அருகில் உள்ள லைட் போஸ்டின் மீது மோதி பலத்த சேதமடைந்தது.

போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட இவ்வாறு ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தொண்டர்கள் அமைதிகாக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

English summary
Stone pelt on a city bus reported in Chennai after Jayalalitha's health issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X