மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும்.. புகழேந்தி பொளேர்!
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும் என தினகரன் ஆதரவளாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சேலம்: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமாரே போதும் என தினகரன் ஆதரவளாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் சசிகலா அணியின் அதிமுக அம்மா அணி சார்பில் தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதனால் ஆர்கே நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு
இந்நிலையில் தினகரனின் தீவிர ஆதரவாளரான புகழேந்தி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த தேர்தலின் போது தினகரன் தொப்பி சின்னத்தில் ஜெயித்துவிடுவார் என்று தெரிந்துதான் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்ததாக குற்றம்சாட்டினார்.

சட்டசபைக்கு செல்வார்கள்
அதனால் தற்போது மீண்டும் களமிறங்குவதாகவும் அவர் கூறினார். உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்டசபை உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் வெற்றிபெற்று மீண்டும் தங்களின் உறுப்பினர்கள் சட்டசபைக்கு செல்வார்கள் என்றும் அவர் கூறினார்.

ஜெயக்குமாரே தோற்கடித்து விடுவார்
எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி இன்னும் 20 நாட்கள் தான் இருக்கும் அதன்பிறகு இந்த ஆட்சி வீட்டுக்கு சென்றுவிடும் என்றும் அவர் கூறினார். மேலும் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடும் மதுசூதனனை ஜெயக்குமாரே தோற்கடித்து விடுவார் என்றும் புகழேந்தி தெரிவித்தார்.

ஜெயக்குமார் ரெடியாக இருக்கிறார்
மதுசூதனனை தோற்கடிக்க நாங்கள் எதுவும் செய்ய வேண்டாம் அதற்கான வேலையை ஜெயக்குமாரே செய்து விடுவார் என்றும் அவர் கூறினார். மதுசூதனனை தோற்கடிக்க ஜெயக்குமார் ரெடியாக இருக்கிறார் என்றும், அவருக்கும் மதுசூதனனுக்கும் தான் தகராறு என்றும் புகழேந்தி தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications