ஏற்காடு இடைத்தேர்தல்: சரோஜாவிற்கு ஆதரவாக இரண்டு நாள் பிரசாரம் செய்யும் ஜெ.,

ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தல், டிச., 4ம் தேதி நடக்கிறது. மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜா, அ.தி.மு.க., வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.அவரை எதிர்த்து, தி.மு.க., சார்பில், மாறன் என்ற புதுமுகம் நிறுத்தப்பட்டுள்ளார். வேறு எந்த கட்சியும் வேட்பாளர் அறிவிக்காததால், இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
தி.மு.க., வேட்பாளர் மாறன், கடந்த, 9ம் தேதி, வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். அ.தி.மு.க., வேட்பாளர் சரோஜா, நாளை, 13ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதற்காக, அமைச்சர்கள் உள்ளிட்ட, 62 தேர்தல் பொறுப்பாளர்களும், நாளை ஏற்காடு வருகின்றனர்.
சட்டசபை சிறப்புக் கூட்டம் இன்று மாலை நடப்பதால், அதை முடித்துக்கொண்டு, அமைச்சர்களும், எம்.எல்.ஏ.,க்களும் அவசர அவசரமாக, ஏற்காடு செல்கின்றனர்.
இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவதற்காக, முதல்வர் ஜெயலலிதா, ஏற்காட்டில், இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார். அநேகமாக, 'வரும், 25, 26 ஆகிய தேதிகளில், ஜெயலலிதா பிரசாரம் செய்வார்' என, அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தி.மு.க., வேட்பாளர், மாறனை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் கருணாநிதி, டிசம்பர், 1ம் தேதி, ஏற்காட்டில்
பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications