Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாருங்க.. அசராமல் பேசும் சி.ஆர்.சரஸ்வதி

ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டது உண்மைதான் என்று தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா மருத்துவமனையில் இட்லி சாப்பிட்டது உண்மைதான் என்றும் மருத்துவர்கள் கூறியதைத்தான் நாங்கள் கூறினோம் என்றும் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.

ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 75 நாள்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.

இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் உலா வந்தன. அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறி வந்தனர்.

இட்லி சாப்பிட்டார்

இட்லி சாப்பிட்டார்

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் இட்லி சாப்பிட்டார், இனிப்பு சாப்பிட்டார் என்று கூறியது பொய் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதனால் ஏகப்பட்ட சர்ச்சைகள் எழுந்தன.

விசாரணை கமிஷன் அறிக்கை

விசாரணை கமிஷன் அறிக்கை

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இதனிடையே ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் மயக்க நிலையில் இருந்ததாகவும் அவரது சர்க்கரை, ரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவை அதிகரித்ததாகவும் தனியார் தொலைகாட்சி நடத்திய களஆய்வில் தெரியவந்தது.

இட்லி சாப்பிட்டது உண்மை

இட்லி சாப்பிட்டது உண்மை

இந்நிலையில் இதுகுறித்து தினகரன் ஆதரவாளர் சி.ஆர். சரஸ்வதி கூறுகையில் அப்பல்லோவில் ஜெயலலிதா உடல் நலமடைந்த பின்னர் இட்லி சாப்பிட்டது உண்மை. ஜெயலலிதா உடல்நிலை பற்றி மருத்துவர்கள் சொன்னதையே நான் ஊடகங்களுக்கு தெரிவித்தேன்.

கடந்த ஓராண்டாக...

கடந்த ஓராண்டாக...

ஜெயலலிதா மரணம் குறித்து வதந்திகளுக்கு நீதி விசாரணை மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றார் அவர். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னர் ஓராண்டாக மோசமான உடல்நிலையில் இருந்தார் என்றும் அவர் இறுதி கட்டத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+