ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வழக்கு.. மனுதாரருக்கு ஹைகோர்ட் சரமாரி கேள்வி
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பது பற்றி ஏன் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் கூறவில்லை என்று, மனுதாரரிடம் ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி, வழக்கறிஞர் செல்வவிநாயகம் என்பவர் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரரிடம் நீதிபதி சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஜெயலலிதா மரணம் குறித்து தேனாம்பேட்டை போலீசில் புகார் கொடுத்தது ஏன்? என்றும், அந்த புகாரின் மீது நடவடிக்கை இல்லை என்று குற்றம்சாட்டும் நீங்கள், ஏன் உயர் அதிகாரிகளிடம் முறையிடவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
உங்களது செயல்பாடுகளில் சுணக்கம் இருந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்ட 186 பேர் மீது எப்ஐஆர் பதியக்கோரி செல்வவிநாயகம் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications