திமுக - காங்கிரஸ் கொள்ளை கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுங்கள்: மதுரையில் ஜெ. பேச்சு
மதுரை: நிலக்கரியில் ஊழல், 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் என பல ஊழலை செய்த கொள்ளை கூட்டணியான திமுக - காங்கிரஸ் கூட்டணியினர் வாக்கு கேட்டு வந்தால் விரட்டியடியுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரையில் பிரச்சார கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, 2011 சட்டசபை தேர்தலை போல, 2014 லோக்சபா தேர்தலைப் போல வரும் சட்டசபைத் தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுத்து முற்றுப்புள்ளி வையுங்கள் என்று கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி கடந்த 9ந்தேதி சென்னை தீவுத் திடலில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஜெயலலிதா தொடங்கினார்.
9வது நாளாக இன்று மாலை 5 மணிக்கு மதுரை பாண்டிகோவில் அருகே ரிங்ரோட்டில் நடைபெற்ற பிரம்மாண்டமான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 47 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று பிற்பகலில் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வந்த ஜெயலலிதா, அங்கிருந்து கார் மூலம் பிரச்சாரம் நடைபெறும் மேடை அமைந்துள்ள இடத்திற்கு வருகை தந்தார். அப்போது திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஜெயலலிதாவிற்கு வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது: கடந்த ஆண்டு அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதவிர தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத பல்வேறு திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரியில் ஊழல் செய்தவர்கள் திமுக - காங்கிரஸ் கூட்டணி. விளையாட்டியிலேயே விளையாடிவர்கள்தானே திமுக - காங்கிரஸ் கூட்டணியினர்
இந்த கொள்ளை கூட்டணியினர் மீண்டும் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலைப் போல, 2016 லோக்சபா தேர்தலைப் போல அடி கொடுங்கள்.
வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு சம்மடி அடி கொடுங்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வையுங்கள். அதிமுக ஆட்சியில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது.மக்களால் நான்... மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தை கடைபிடித்து பணியாற்றி வருகிறேன்.
உங்களால் நான் உங்களுக்காகவே நான்... உங்களுக்காகவே அர்பணிக்கப்பட்டது என் தவ வாழ்வு.நான் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டேன். நீங்கள் நினைக்காத, கேட்காத திட்டங்களை எல்லாம் நிறைவேற்றியுள்ளேன்.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் வசந்தம் வீசுகிறது இந்த வசந்தம் தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் வசந்தம் வீசுகிறது இந்த வசந்தம் தொடர அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்றார் ஜெயலலிதா.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications