பதவியேற்ற கையோடு ஜெ. அமைச்சரவையில் மாற்றம்... 4 புதிய அமைச்சர்கள் நியமனம்- மே 25ல் பதவியேற்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், 28 அமைச்சர்களும் இன்று பிற்பகல் பதவியேற்ற நிலையில் அமைச்சரவை 24 மணி நேரத்திற்குள் இன்று மீண்டும் விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இன்று பதவியேற்ற அமைச்சர்கள் வசம் கூடுதலாக இருந்த துறைகள் பிரிக்கப்பட்டு புதிதாக நால்வருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர்.

15வது சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவுடன், 28 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவியேற்றனர். முதலில் 14 அமைச்சர்கள் பதவியேற்றனர். அடுத்ததாக 14 அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பின்னர் ஆளுநருடன் புதிய அமைச்சரவை குழு புகைப்படம் எடுத்துக் கொண்டது.
இதனிடையே தமிழக அமைச்சரவையில் மேலும் நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக டாக்டர் நிலோஃபர் கபில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேவூர் எஸ். ராமச்சந்திரனும், கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சராக பாலகிருஷ்ண ரெட்டியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காதி, கிராம தொழில் துறை அமைச்சராக ஜி. பாஸ்கரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஆர். காமராஜ் வசம் கூடுதலாக இந்து சமய அறநிலையத்துறை இருந்தது, அமைச்சர் செல்லூர் ராஜூ வசம் கூடுதலாக தொழிலாளர் நலத்துறை இருந்தது. அமைச்சர் துரைக்கண்ணு வசம் கூடுதலாக கால்நடைத்துறை இருந்தது. இவர்கள் வசமிருந்த துறைகள் தனியாக பிரிக்கப்பட்டு நான்கு புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளனர்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என சர்ச்சை வெடித்து. இந்த நிலையில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் ஜெயலலிதா அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 4 பேரும் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளனர்.
-
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது? -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
நாதக கூட்டத்தில் ஒலித்த டிவிகே கோஷம்.. டீயாடா விக்கிறாய்? தற்குறிகள்! டென்ஷனான சீமான்..ஒரே பரபரப்பு -
கூட்டணி மாறியதால் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்கலை! ஆனால் அது உண்மைதான்! எடப்பாடி பழனிசாமி -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு












Click it and Unblock the Notifications