ஈஸ்டர் திருநாள்: ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஈஸ்டரையொட்டி முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நாளை ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இயேசு பிரான் போதித்த, அன்பு, இரக்கம், பணிவு, தியாக உணர்வு, சகோதரத்துவத்தை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் இந்த வேளையில், பசித்தவர்களுக்கு உணவளிக்க முன்வருவோம் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்கு நம்பிக்கையையும், நல்வழியையும் ஈஸ்டர் வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications