வரலாறு காணாத வெற்றியைத் தந்த தமிழக மக்களுக்கு... போன் செய்து ‘நன்றி’ சொல்லும் அம்மா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை சாத்தியமாக்கிய தமிழக வாக்காளர்களுக்கு செல்போன் வாயிலாக நன்றி அறிவிப்பு செய்து வருகிறார் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.

16வது லோக்சபா தேர்தல் ஒன்பது கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 24ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது பெற வேண்டும் என்ற குறிக்கோளோடு உழைத்தது அதிமுக. அதற்கு வசதியாக தொழில்நுட்பத்தை பிரச்சாரத்திற்காக தனது கையில் எடுத்தது.

செல்போன் பிரச்சாரம்...

செல்போன் பிரச்சாரம்...

அதன்படி, வாக்காளர்களின் செல்போனில் ஜெயலலிதாவின் பிரச்சாரம் அழைப்புகளாகவும், எஸ்.எம்.எஸ்.களாகவும் வந்தது.

செய்வீர்களா...

செய்வீர்களா...

அந்த அழைப்பில், ‘‘நாட்டின் முன்னேற்றத்துக்கும், அமைதி, வளம், வளர்ச்சிக்கும் அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும். செய்வீர்களா..., நீங்கள் செய்வீர்களா...? என்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல் பதிவு செய்யப் பட்டிருந்தது.

வெற்றி...

வெற்றி...

அதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த வெள்ளியன்று எண்ணப் பட்டன. அதன்படி, அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

நன்றி அறிவிப்பு....

நன்றி அறிவிப்பு....

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் ஏராளமான செல்போன்களில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நன்றி அறிவிப்பு பேச்சு அழைப்பு வர ஆரம்பித்தது.

இதயங்கனிந்த நன்றி...

இதயங்கனிந்த நன்றி...

அந்த குரல் பதிவில் முதலமைச்சர் ஜெயலலிதா, ‘‘நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துக்கு வழங்கி உள்ள எனது அன்பார்ந்த தமிழக மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய ஒரு மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் மீண்டும் ஒரு முறை எனது இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துகொள்கிறேன்'' எனத் தெரிவிக்கிறார்.

வாட்ஸ் அப் மூலமாகவும்...

வாட்ஸ் அப் மூலமாகவும்...

செல்போன் அழைப்புகளாக மட்டுமல்லாமல் எஸ்.எம்.எஸ் மற்றும் ‘வாட்ஸ் அப்' மூலமும் இதுபோன்ற நன்றி அறிவிப்பு பல லட்சம் மக்களைச் சென்று சேர்ந்துள்ளதாம்.

அம்மாவே நேரடியா பேசுறாங்க....

அம்மாவே நேரடியா பேசுறாங்க....

இத்தகைய நன்றி அறிவிப்புகளைக் கேட்டவர்கள் முதல்வரே தங்களுக்கு நேரடியாக நன்றி தெரிவித்துள்ளதாக குதூகலித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+