ஜெ. சிகிச்சை தீவிரம்.. 3வது முறையாக வரும் லண்டன் டாக்டர்.. 5 நாள் சிகிச்சை தரப் போகிறார்!
சென்னை: ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் ரிச்சர்ட் மீண்டும் சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை அவர் 5 நாட்கள் சென்னையில் தங்கியிருந்து முதல்வருக்கு சிகிச்சை அளிப்பார் என்றும் அப்பல்லோ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 22 தேதி இரவு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 3 வாரங்களுக்கும் மேலாக மருத்துவ குழுவினர் முதல்வரின் ஜெயலலிதா உடல்நிலையை 24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

லண்டன் டாக்டர் ரிச்சர்ட்
முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கையும் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 30ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த லண்டன் டாக்டர் டாக்டர் ரிச்சர்ட் பீலே, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.

எய்ம்ஸ் டாக்டர்கள்
முதல்வரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, கடந்த 2ம் தேதி லண்டன் புறப்பட்டுச் சென்றார். கடந்த 5ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் ஜி.கில்நானி, மயக்க மருத்துவ நிபுணர் அஞ்சன் த்ரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் கொண்ட குழுவினர் மருத்துவமனைக்கு வந்தனர். முதல்வருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்த குழுவினர் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.

என்ன மாதிரி சிகிச்சை
கடந்த 6ம் தேதி லண்டனில் இருந்து மீண்டும் வந்த டாக்டர் ரிச்சர்ட் பீலே, எய்ம்ஸ் டாக்டர்களும் இணைந்து முதல்வருக்கு அடுத்தக் கட்டமாக அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து தீவிர ஆலோசனைகளை நடத்தினார். அவர்களின் பரிந்துரைப்படி டாக்டர் கள் குழுவினர் முதல்வருக்கு செயற்கை சுவாச உதவியுடன் நுரையீரல் சிகிச்சை, நோய் தொற்றுக்கான மருந்துகள் மற்றும் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. முதல்வருக்கு ஊட்டச்சத்து மற்றும் பிசியோதெரப்பி சிகிச்சைகளும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

மீண்டும் லண்டன் டாக்டர்
இந்நிலையில் மீண்டும் லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலே இன்று சென்னை வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் 5 நாட்கள் தங்கி முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஆராய்ந்து, அடுத்தக் கட்ட சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்.

சிறப்பு சிகிச்சைகள்
ரிச்சர்ட் இந்த முறை திரும்பி செல்லும் தேதி முடிவு செய்யப்படாததால் அவர் அதிக நாட்கள் சென்னையில் தங்கி முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க வாய்ப்பு உள்ளது. இதுபோல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்களும் இன்று மீண்டும் சென்னை வர இருக்கின்றனர். அவர்களும் சென்னையில் தங்கி இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர்.

அதிமுகவினர் நம்பிக்கை
ஜெயலலிதா விரைவில் குணமடைய அதிமுகவினர் தொடர்ந்து பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வருவதால், முதல்வர் விரைவில் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications