தமிழர்களை அவமானப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி... ஜெ.க்கு "தமிழர்குல சாமி" பட்டமாம்!
ஜெயலலிதாவை 'தமிழர் குல சாமி' என்று குறிப்பிடப்பட்டு அதிமுகவின் மதுரை இளைஞர் பெருவிழாவில் பேனர்கள் வைக்கப்பட்டது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை: ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகள் என்பதைக் காட்டிக் கொள்வதற்காக தமிழர்கள் மானத்தை கப்பலேற்றும் வகையில் அவரை 'தமிழர் குலசாமி' என்று குறிப்பிட்டு பிரமாண்ட பேனர்கள் வைத்து பொதுமக்களின் கடும் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது எடப்பாடி கோஷ்டி.
மதுரை பாண்டிகோவில் அருகே இளைஞர் பெருவிழாவை எடப்பாடி கோஷ்டி சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அனைத்து தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

தமிழர் குல சாமி
இந்த இளைஞர் பெருவிழாவில் வேலைவாய்ப்பு முகாம், கலைத்திறனை ஊக்குவிக்கின்ற வகையில் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், திறன் மேம்பாட்டு பயிற்சி, இளைஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தேறின. விழா மேடையில் 'தமிழர் குலசாமி' என்று ஜெயலலிதாவுக்கு அடைமொழி சூட்டப்பட்டு,பேனர் வைக்கப்பட்டிருந்தது.

அரசு குறிப்புகள்..
முதலில் இது யாருக்கும் தெரியாமல் இருந்தது. இதே அடைமொழி அரசின் செய்திக்குறிப்புகளிலும் வந்ததுதான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அன்று பாண்டு ரங்கன்
1991-96ம் ஆண்டில் வேளாண் துறை அமைச்சராக இருந்த 'கூழை கும்பிடு' பாண்டுரங்கன் ஜெயலலிதாவை 'கடவுளின் கடவுள்' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். அவர் இப்போது தீபா பேரவையில் இருக்கிறார் என்பது வேறு விஷயம்.

அவமான செயல்
அதிமுக கோஷ்டிகளுக்குத் ஜெயலலிதா தலைவராக இருந்துவிட்டு போகட்டும்.. தலையில் தூக்கி வைத்து அவர் படத்துடன் நடக்கட்டும். அதற்காக ஜெயலலிதாவை 'தமிழர் குலசாமி' என பட்டம் சூட்டி மகிழ்வது என்பதெல்லாம் தமிழர்களை அவமானப்படுத்துகிற செயல்தான்!
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications