எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாள்: 24ம்தேதி நினைவிடத்தில் ஜெயலலிதா மலர் அஞ்சலி
சென்னை: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 28வது ஆண்டு நினைவு நாளான 24ம் தேதி முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 28-வது ஆண்டு நினைவு நாளான 24-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்ககள், கழக நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்கள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் நினைவு தினத்தின் போது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்திருந்தார். ஜாமீனில் வெளிவந்து சென்னையில் இருந்த போதும் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. போயஸ்கார்டன் இல்லத்திலேயே எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதிமுக உருவான தினமான அக்டோபர் 17ம் தேதி கட்சியினரை சந்திக்க தலைமைக்கழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கோடநாட்டிற்கு சென்ற ஜெயலலிதா, அங்கு நடைபெற்ற விழாவில் பங்கேற்றார். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களையும், அதிமுகவினரையும் முதல்வர் ஜெயலலிதா நேரில் சந்திக்கப் போகிறார் .
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications