Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்: ”அம்மா உணவகங்களில்" ஜெ. படங்கள் அகற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அம்மா உணவகங்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த துறைகளில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் நீக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் ஆணையத்தினால் நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து தமிழகத்தில் உடனடியாக தேர்தல் கால நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

Jayalalitha photos remove from official firms

இதனையடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் ஜெயலலிதா படம் அகற்றப்பட்டது. அதே போன்று அம்மா உணவகம், அம்மா குடிநீர் பாட்டில் ஆகியவற்றில் உள்ள முதல்வர் படத்தை அகற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் பேனர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணி, மாநிலம் முழுவதும் துவக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து மலிவு விலை உணவகங்களிலும் எல்.சி.டி திரையில் அரசு சாதனைகள் விளம்பரமாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.

அந்த விளம்பரங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி இணையதளத்தில் இருந்த அரசு சாதனை விளம்பரங்கள், பணிகள் குறித்த விவரங்கள் யாரும் பார்க்க முடியாத வகையில் முடக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சி துறைஅலுவலகங்களில் இருந்த முதல்வர் படங்கள் அகற்றப்பட்டன. மகாத்மா காந்தி படத்தை தவிர வேறு எந்த தலைவர்களின் படமும் அரசு அலுவலகத்தில் இடம்பெறக் கூடாது என தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறை நிறுவனங்களுக்கும், மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் இந்த விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+