போயஸ்கார்டன் டூ விமான நிலையம்.. ஜெ. பயண பாதையில் குவிந்து மோடிக்கு மாஸ் காட்டிய அதிமுகவினர்!
சென்னை: பிரதமர் நரேந்திரமோடியை சென்னை விமான நிலையத்தில் ஜெயலலிதா வரவேற்க காரில் சென்றபோது சாலையின் இரு புறமும் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். பிரதமருக்கு மாஸ் காட்டும் முயற்சியை போலவே இந்த நடவடிக்கைகள் தெரிந்ததாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
சென்னையில் நெசவாளர் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். சிறப்பு விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்த மோடியை ஜெயலலிதா நேரில் சென்று வரவேற்றார்.

இதற்காக போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா காரில் விமான நிலையம் சென்றார். இரு இடங்களுக்கும் சுமார் 15 கி.மீ தூரம் உள்ளது. ஆனால் சாலையில் இருபுறங்களிலும் அதிமுகவினர் கூடி நின்று ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷமிட்டனர். கைகளில் அதிமுக கொடிகளை அசைத்தனர்.

ஜெயலலிதா, மோடியை வரவேற்க நேரில் செல்வது காலையில்தான் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கே தெரியும். ஆனால், ஆயிரக்கணக்கான மக்கள் அறிந்து கொண்டு, சாலையின் இருபுறமும் குவிந்தது எப்படி என்பதில்தான், மாவட்ட செயலாளர்களின் மாயம் இருப்பதாக கூறுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள், நேற்று முதல், முழு வீச்சில் இறங்கி, அதிமுக தொண்டர்களை அழைத்து வந்து சாலையின் இருபக்கமும் நிறுத்தியிருந்தனர். இதனால், ஜெயலலிதா மகிழ்ச்சியடைவார் என்பதோடு, பிரதமர் மோடியும் இதையறிந்து வியப்பு கொள்வார் என்பது மா.செக்கள் திட்டம்.
பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக-பாஜக கூட்டணி சேரும் வாய்ப்பு இருப்பதால், இந்த மாஸ் காட்டும் படலம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், ஜெயலலிதா தலைமைச் செயலகம் போகும்போது, இப்படி கூட்டம் கூடி வரவேற்பதில்லை என்பது இதில் கவனிக்கத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications