தியாகத்தைப் போற்றும் பக்ரீத் திருநாள் - ஜெ., ரோசையா வாழ்த்து

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது, ‘இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த தியாகத்திற்கும் தயங்க மாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உருவங்களையோ, செல்வங்களையோ காணாமல் உள்ளங்களையும், செயல்களையும் மட்டுமே இறைவன் காண்கிறான்; எனவே உள்ளத் தூய்மையுடன் கூடிய நம்பிக்கையின் மூலமே இறை அருளைப் பெற முடியும் என்கிற நபிகள் நாயகத்தின் போதனையை நினைவில் கொண்டு, சாதி,
மத பேதம் பாராமல் அனைவரும் ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ இந்த உயர்ந்த நாளில் உறுதியேற்போம். தியாகத்தின் சிறப்பினை மனதில் நிலை நிறுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், அமைதியுடனும், மனித நேயத்துடனும், ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும் என்ற எனது விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
ரோசையா வாழ்த்து:
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,
பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் முஸ்லிம் சகோதரர்களுக்கு இதயம் கணிந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். தியாகத் திருநாளான இப்பண்டிகை அன்று தியாக உணர்வு, உண்மை, நல்லிணக்கம், ஒற்றுமை பரவட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications