உழைப்பால் வெற்றியை உருவாக்கு... முயற்சியை அதற்கு எருவாக்கு... திருமணவிழாவில் ஜெ. பேச்சு
சென்னை : சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும் என்று தொண்டர்களுக்கு ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மக்கள் நலனில் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அரசு மீது பொய்பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில், அதிமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் இல்ல திருமணவிழா நடைபெற்றது.

இதில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஜெயலலிதா, உங்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது, நீங்கள் வளர்வது உங்களின் கையில்தான் உள்ளது என்றார். மற்றவர்களின் மனதை, இயல்பு புரிந்து கொண்டு வாழ வேண்டும் என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

அதிமுக போன்ற மக்கள் இயக்கத்தை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது. மக்கள் நலனின் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் அரசு மீது பொய் பிரசாரம் நடத்தி வருகின்றனர். அரசியலில் உள்ளவர்களுக்கு அரசியல் வாழ்க்கையே பாடம் கற்றுக்கொடுக்கும். சட்டசபை தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும். அதிமுக கட்சியின் வளர்ச்சியை பொறுக்கமுடியாமல், எதிர்க்கட்சிகள் வசைபாடி வருகின்றன என்றார்.
உழைப்பால் வெற்றியை உருவாக்கு... முயற்சியை அதற்கு எருவாக்கு... சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் வகையில் களப்பணியாற்ற வேண்டும். உங்களால் முடியாதது வேறு எவரால் முடியும்? என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்!












Click it and Unblock the Notifications