இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு ஜெ. நன்றி
சென்னை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் 134 இடங்களில் வென்று அதிமுக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தமது வாழ்த்து செய்தியில், தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக தெரிவாகியுள்ளமைக்கு ஈழத்தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். வருங்காலத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு பலவிதமான நன்மைகளை செய்வார் என எதிர்பார்க்கிறேன். தமிழ் நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளமை மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது. அதனால் தொடர்ந்து அவர் தமிழக மக்களுக்கும் ஈழத்து தமிழ் மக்களுக்கும் பல நன்மைகள் செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தமக்கு வாழ்த்து தெரிவித்த விக்னேஸ்வரனுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில், வடகிழக்கு மாகாண தமிழர்கள் உரிய நீதியைப் பெற மத்திய அரசு மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம்; இலங்கை தமிழர் நலன் தொடர்பாக இருவரும் நிச்சயம் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications