இலங்கை சிறையில் 15 தமிழக மீனவர்கள்.. 53 படகுகளையும் விடுவிக்க கோரி மோடிக்கு ஜெ. கடிதம்
சென்னை: இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 15 தமிழக மீனவர்களையும், 53 படகுகளையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நவம்பர் 25ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்கள் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே போல 26ம் தேதி புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவது தொடர்கதையாகியுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தங்களின் தலியீடு அவசியமாகிறது. இந்தப் பிரச்னையை மேலும் கிடப்பில் போட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
எனவே உடனடியாக இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு 15 மீனவர்களையும், அவர்கள் வசம் உள்ள 53 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேணடும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications