ஜெயலலிதா வெற்றியை மொட்டை போட்டு கொண்டாடிய போலீஸ்
தேனி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து தேனியில் அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் மொட்டை போட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் ஜெயலலிதா. இந்த வெற்றியை தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை கொடுத்தும் அதிமுகவினர் இடைத்தேர்தல் வெற்றியை கொண்டாடும் நிலையில், தேனியில் ஏராளமான அதிமுகவினர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஜெயலலிதா பெற்ற வெற்றிக்காக, சீருடையில் மொட்டை அடிக்கும் ஒரு அடிமை.....ராமானுஜம், அடிமையாகும்போது, அந்த உரிமை காவலருக்கு இல்லையா என்ன ?
Posted by Shankar Savukku onTuesday, June 30, 2015
அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் சீருடையில் மொட்டைப் போட்டுக்கொண்டார். இது அங்கு வந்திருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தேனி மாவட்டம் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் அவரது பெயர் வேல்முருகன். இடைத்தேர்தலில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்று இத்தனை நாளாக விரதம் இருந்த நேரு சிலை அருகில் மொட்டை போட்டு தனது வேண்டுதலை நிறைவேற்றி உள்ளார்.
வேல்முருகனின் விரதம் இதோடு முடியவில்லையாம். பிப்ரவரி மாதம் வரும் ஜெயலலிதா பிறந்த நாளில், மிக அதிக எடையுள்ள வாகனத்தை தன்மீது ஏற்றி சாதனை புரிய உள்ளாராம்.
ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சேலம் மாநகரக் காவல்துறையின் மேற்கு சரக குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வரும் கணேசன், காலில் அடிபட்டதாகக் கூறி 10 நாட்கள் மெடிக்கல் லீவு போட்டுவிட்டு அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க.வினருடன் இணைந்து வாக்கு சேகரித்தார். அவர் கட்சி கரை வேஷ்டி கட்டிகொண்டு பணியாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் சீருடையுடன் மொட்டை போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications