ஜெ.ஊழலின் மகாராணி என்றால் சசிகலா ஊழலின் இளவரசி... ராமதாஸ் கடும் தாக்கு

ஜெயலலிதா ஊழலில் மகாராணி என்றால் சசிகலா ஊழலின் இளவரசியாக திகழ்ந்ததார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா ஊழலில் மகாராணியாக வலம் வந்தார். அதுபோல் சசிகலாவோ ஊழலின் இளவரசியாக இருந்தார் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், தமிழகம் வீழ்ச்சியை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

 முதல்வர் ராஜினாமா தேவை

முதல்வர் ராஜினாமா தேவை

தமிழக அரசு திவாலாகிவிட்டது. திவாலான அரசுக்கு முதல்வர் தேவையில்லை. எனவே அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஜெயலலிதா ஊழல் மகாராணி எனில் சசிகலா ஊழல் இளவரசியாக இருந்தார்.

 வளர்ப்பு மகன் திருமணம்

வளர்ப்பு மகன் திருமணம்

ஜெயலலிதா, சசிகலா வீடுகளில் ஐடி சோதனை முன்னரே நடத்தியிருக்க வேண்டும். தமிழக அரசு பெற்ற கடனுக்காக வட்டியாக ரூ.53,000 கோடியை செலுத்துகிறது தமிழக அரசு. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு ரூ100 கோடியில் நடத்தப்பட்ட திருமணத்தை உலகமே பேசியதை யாரும் மறந்துவிட முடியாது.

 வங்காள விரிகுடா தவிர

வங்காள விரிகுடா தவிர

வங்காள விரிகுடாவைத் தவிர அனைத்து இடங்களையும் சசிகலா கோஷ்டி வாங்கியதாக 90-களில் பேச்சு அடிப்பட்டது. சசிகலாவின் சொத்துகளை பறிமுதல் செய்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

 ரெய்டுகள் என்னாச்சு?

ரெய்டுகள் என்னாச்சு?

எடப்பாடி, ஓபிஎஸ் வீடுகளிலும் சோதனை நடத்தியிருக்க வேண்டும். முன்னதாக சேகர் ரெட்டி, ராம்மோகன ராவ் வீடுகளில் நடத்திய சோதனை என்ன ஆனது? என கேள்வி எழுப்பினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+