உடல் நல பிரச்சினையா?.. ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு நாள் மட்டுமே ஜெ. தேர்தல் பிரசாரம்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா ஒரே நாள் மட்டும் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உடல் நலக்குறைவே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
காலியாக உள்ள சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் அடுத்த மாதம், 27ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இங்கு, முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளராக ஜெயலலிதாவை, அக்கட்சியின் ஆட்சி மன்றக்குழு, இன்று அறிவிக்கும் என்று தெரிகிறது. தேர்தல் பணிக் குழு உறுப்பினர்களின் பட்டியலும், அப்போது வெளியிடப்படும்.

அடுத்த மாதம், 5ம் தேதி, ஜெயலலிதா மனு தாக்கல் செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது. 21ம் தேதி, ஒரு நாள் மட்டும் ஆர்.கே.நகரில், அவர் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் தொகை குறைவுதான் என்பதும், அது ஏற்கனவே அதிமுகவின் கோட்டை என்பதும், ஜெயலலிதா ஒரே நாள் பிரசாரம் செய்ய காரணம் என்று கூறப்பட்டாலும், வேறு ஒரு காரணமும், இந்த முடிவுக்கு காரணமாம்.
ஜெயலலிதாவின் உடல்நிலை சோர்ந்து காணப்படுகிறது என்கின்றனர் கார்டன் வட்டாரத்தில். ஹைகோர்ட் தீர்ப்பு வந்தபிறகு. முதல்வராக பதவியேற்பதில் காலதாமதம் ஆனதற்கும் இதுதான் காரணமாக கூறப்பட்டது. முதல்வர் பதவியேற்பு விழாவின்போதும், ஜெயலலிதாவின் வழக்கமான மிடுக்கு குறைந்து காணப்பட்டதாக பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகரில் ஒரே நாள் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்யவும், ஜெயலலிதாவின் உடல்நலப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications