Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவில் மீண்டும் பதவி பெற்ற பண்ருட்டியார்... செம்மலை, கோகுல இந்திராவுக்கும் பதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்சியின் மூத்த தலைவர்களான பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர் அமைப்புச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாது செம்மலை, அமைச்சர் கோகுல இந்திரா, பண்ருட்டி.ராமசந்திரன், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ வளர்மதி, தூத்துக்குடி எம்.பி ‌ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, K.செல்வராஜ், குளித்தலை பாப்பாசுந்தரம், நாமக்கல் S.ராஜூ ஆகியோரும், அமைப்புச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு 19ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதா பெயரை கட்சியினர் முன்மொழிந்தனர். இதைத்தொடர்ந்து ஆகஸ்டு 29ம் தேதி அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக போட்டியின்றி ஒரு மனதாக ஜெயலலிதா 7வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

Jayalalithaa announces new office-bearers for AIADMK

இதைத்தொடர்ந்து அ.தி. மு.க.வின் மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு அணி பிரிவுகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய மாவட்ட செயலாளர்களும், வட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டார்கள். தற்போது மாநில நிர்வாகிகளின் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதன்படி அதிமுக அவைத் தலைவராக மதுசூதனனும், அமைப்புச் செயலாளராக பொன்னையனும் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதிமுக பொருளாளராக ஒ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொள்கை பரப்புச் செயலாளராக தம்பிதுரையும், கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நாஞ்சில் சம்பத்தும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக ஒ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொன்னையன் மட்டுமின்றி, விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைச்சர் கோகுல இந்திரா, பண்ருட்டி.ராமசந்திரன், செம்மலை, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ வளர்மதி, தூத்துக்குடி எம்.பி ‌ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, K.செல்வராஜ், குளித்தலை பாப்பாசுந்தரம், நாமக்கல் S.ராஜூ ஆகியோரும், அமைப்புச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நாஞ்சில் சம்பத்தும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக தமிழ்மகன் உசேனும், அதிமுக நாடாளுமன்ற குழு தலைவராக வேணுகோபாலும், நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர, மேலும் சில கட்சிப் பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது தொடர்பாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சி நிர்வாகிகள் முழு பட்டியல்

• ஜெயலலிதா ,கழகப் பொதுச் செயலாளர் கழகப் பொதுச் செயலாளர் தமிழ் நாடு முதலமைச்சர் அதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

•இ. மதுசூதனன் அதிமுக அவைத் தலைவர்

• சி. பொன்னையன் அதிமுக அமைப்புச் செயலாளர்

• ஓ. பன்னீர்செல்வம் அதிமுக பொருளாளர் மற்றும் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்

• நத்தம் இரா. விசுவநாதன், அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர்மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சர்

• ஆர். வைத்திலிங்கம் அதிமுக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்

• எடப்பாடி மு. பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் சேலம் புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்

• பி. பழனியப்பன் அதிமுக தலைமை நிலையச் செயலாளர் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்உயர் கல்வித் துறை அமைச்சர்

• அ. தமிழ்மகன் உசேன் , அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு வக்ஃபு வாரியம்

• டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் கழக அமைப்புச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்

• பண்ருட்டி எஸ்.. ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளர்

•டாக்டர் மு. தம்பிதுரை அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மக்களவை துணை சபாநாயகர்

• செ. செம்மலை அதிமுக அமைப்புச் செயலாளர்

• துரை கோவிந்தராஜன் அதிமுக விவசாயப் பிரிவுத் தலைவர்

• பா. வளர்மதி அதிமுக இலக்கிய அணிச் செயலாளர் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர்

• தாடி ம. ராசு, அண்ணா தொழிற்சங்கப் பேரவைத் தலைவர்

• சு. சின்னசாமி, எம்.எல்.ஏ, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்

• ஜஸ்டின் செல்வராஜ் அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்

• அன்வர்ராஜா, எம்.பி. அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர்

• ஆர்.பி.. உதயகுமார் , அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளர், வருவாய்த் துறை அமைச்சர்

• எஸ். கோகுல இந்திரா கழக அமைப்புச் செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை அமைச்சர்

• செல்வராஜ்,எம்.பி., கழக அமைப்புச் செயலாளர், கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர்

• டாக்டர் வேணுகோபால் அதிமுக மருத்துவ அணிச் செயலாளர், நாடாளுமன்றக்குழு தலைவர்

• சேதுராமன் அதிமுக வழக்கறிஞர் பிரிவுத் தலைவர்

• நவநீதகிருஷ்ணன் எம்.பி. அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் மாநிலங்களவை குழுத் தலைவர்

• ராஜூ (நாமக்கல் மாவட்டம்) அதிமுக அமைப்புச் செயலாளர்

• மு.மு. கலைமணி அதிமுக மீனவர் பிரிவுச் செயலாளர்

• உடுமலை மு. ராதாகிருஷ்ணன் அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் தலைவர், தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்

• பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ , (குளித்தலை தொகுதி) அதிமுக அமைப்புச் செயலாளர்

• ஜெனிபர் சந்திரன் அதிமுக மீனவர் பிரிவு இணைச் செயலாளர்

• கமலகண்ணன் அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்

• நாஞ்சில் சம்பத் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

• சசிகலா புஷ்பா, எம்.பி. அதிமுக மகளிர் அணிச் செயலாளர், மாநிலங்களவை குழு கொறடா

• ப. குமார், எம்.பி. அதிமுக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் கழக மனுக்கள் பரிசீலனைக் குழு உறுப்பினர் கழக மக்களவை குழு துணைத் தலைவர்

• எஸ்.ஆர். விஜயகுமார், எம்.பி. அதிமுக மாணவர் அணிச் செயலாளர், மக்களவை குழு கொறடா

• அஸ்பயர் மு. சுவாமிநாதன் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர்

• ஏ. அலெக்சாண்டர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

• வைரமுத்து, எம்.எல்.ஏ(திருமயம் தொகுதி) கழக விவசாயப் பிரிவுச் செயலாளர்

• டாக்டர் மு. கோபால், எம்.பி. (நாகப்பட்டினம் தொகுதி) கழக அமைப்புச் செயலாளர்

• வளர்மதி, எம்.பி. (ஸ்ரீரங்கம் தொகுதி) அதிமுக அமைப்புச் செயலாளர்

• து. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, எம்.பி. (தூத்துக்குடி தொகுதி) அதிமுக அமைப்புச் செயலாளர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+