அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் மனோஜ் பாண்டியன் நீக்கம்- நவநீதகிருஷ்ணன் நியமனம்!!
சென்னை: அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜ்யசபா எம்.பி. மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நவநீதகிருஷ்ணன் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜூலை 3-ந் தேதி நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளராக நவநீத கிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தாம் வகித்து வந்த தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியை வெள்ளிக்கிழமையன்று நவநீதகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவை நேற்று நவநீதகிருஷ்ணன் சந்தித்துப் பேசினார். இந்த நிலையில் திடீரென ராஜ்யசபா எம்.பி. மனோஜ் பாண்டியன், அவர் வகித்து வந்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராக நவநீதகிருஷ்ணனையே ஜெயலலிதா நியமித்து அறிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் பி.எச். மனோஜ் பாண்டியன் எம்.பி, இன்று முதல் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.நவநீதகிருஷ்ணன் இன்று முதல் கழக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications