திமுக தலைவர் யார் என்பதில் கருணாநிதி- ஸ்டாலின் இடையே குழப்பம்.. போட்டுத்தாக்கும் ஜெ.
சென்னை: திமுகவின் தலைவர் யார் என்பதில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே குழப்பம் இருப்பதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்தார்.
சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக ஆட்சியைவிட அதிமுக ஆட்சியில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன; உணவுதானிய உற்பத்தி அதிகரித்துள்ளது என புள்ளி விவரங்களை அடுக்கினார்.
அப்போது கச்சத்தீவு குறித்தும் பேசிய ஜெயலலிதா, கச்சத்தீவை கொடுத்த பிறகு தான் தனக்கு தெரியும் என கருணாநிதி கூறினார்.

ஓடும் திமுகவினர்...
கச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கச்சத்தீவு பற்றி சட்டசபையில் பேசாமல், வெளியில் இருந்து பேசுகிறார். கேள்விகளுக்கு பயந்து தி.மு.க.வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். கச்சத்தீவு பிரச்னையை எடுத்தாலே தி.மு.க.,வினர் ஓடுகின்றனர்.

கருணாநிதி வருவாரா?
கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குப்போடப்போவதாக வாஜ்பாய் சொல்லியும் கருணாநிதி ஏன் முன் வரவில்லை. கச்சத்தீவு குறித்து பதில் அளிக்க கருணாநிதியை திமுகவினர் சட்டசபைக்கு அழைத்து வர வேண்டும். அழைத்துவரத் தயாரா? என்றும் சவால் விட்டார்.

குழப்பம்
இதன் பின்னர் திமுக தலைவர் யார் என்பதில் ஸ்டாலின், கருணாநிதிக்குள் குழப்பம் இருக்கிறது என்றும் விமர்சித்தார் ஜெயலலிதா.

ஓபிஎஸ்
சில நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையிலும், கருணாநிதியிடம் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஸ்டாலின் பறித்துவிட்டார்; தந்தைக்கும் தனயனுக்கும் இடையே குழப்பம் இருக்கிறது என கூறியிருந்தார். அதற்கு ஸ்டாலின், தந்தைக்கும் தனயனுக்கும் இடையே சிண்டு முடிய வேண்டாம் என மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications