Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணை

Subscribe to Oneindia Tamil

-கர்நாடகத்தில் இருந்து தமிழகம் செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி அரசு பேருந்துகளும் ரத்து

-பல மாவட்டங்களில் வெளியூர் செல்லும் பேருந்துகள் அடியோடு நிறுத்தம்

-நெல்லை மாவட்டத்தில் அனைத்து வெளியூர்ப் பேருந்துகளும் நிறுத்தம்

-பெங்களூர் செல்லும் பேருந்துகள் முழுமையாக நிறுத்தம்

-சென்னையில் மீண்டும் பதட்டம்- கடைகள் அடைக்கப்படுவதால் மக்கள் பீதி

-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

-மாநில சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ், முதல்வர் சித்தராமையாவுக்கு நேரில் விளக்கம்

-ஜாமீன் மறுப்பு தீர்ப்பை டி.வியில் பார்த்து ஜெயலலிதா மயங்கி விழுந்தார்

-சிகிச்சை அளிக்க சிறை மருத்துவர்கள் விரைந்தனர்

-அவசரமாக ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை- கர்நாடக உயர்நீதிமன்றம்

-நாளை உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மேல் முறையீடு கோரி மனு தாக்கல்

-ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை- நீதிபதி

-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபணை இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியும் ஜாமீன் கிடைக்கவில்லை

-சசிகலா, சுதாகரன், இளவரசிக்கும் ஜாமீன் இல்லை

-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் இல்லை- கர்நாடக உயர் நீதிமன்றம்

-தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு

-தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிப்பு

-முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின

-நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது

-ஜெ. உட்பட நால்வர் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிந்தது

-ஜாமீன் அளிக்க எதிர்ப்பு இல்லை என்று நீதிமன்றத்தில் அரசு வக்கீல் பவானிசிங் கருத்து தெரிவிப்பு

-ஜெ. சார்பில் ராம் ஜெத்மலானி சில விளக்கங்களை அளித்த பிறகு இளவரசி தரப்பு வாதம் தொடக்கம்

-இளவரசி வக்கீல் அஷ்மத் பாஷா வாதத்தை தொடங்கினார்

-வளர்ப்பு மகன் திருமணத்திற்கான செலவை ஜெயலலிதா ஏற்கவில்லை-ஜெத்மலானி

-பெண் வீட்டார்தான் திருமணச் செலவை ஏற்றனர்-ஜெத்மலானி வாதம்

-ஜெயலலிதாவுக்காக மீண்டும் ராம் ஜெத்மலானி வாதம் ஆரம்பம்

-வளர்ப்பு மகன் திருமண விவகாரம் குறித்து ஜெத்மலானி வாதம் செய்து வருகிறார்

-உணவு இடைவேளைக்கு பிறகு ஜெ. உள்ளிட்ட நால்வர் மீதான ஜாமீன் மனு விசாரணை துவக்கம்

-மதியம் 2.35 மணிக்கு ஜாமீன் மனு விசாரணை மீண்டும் துவக்கம்

-இளவரசி தரப்பு வக்கீல் தனது வாதத்தை எடுத்து வைக்க உள்ளார்

-ஜெ., சசிகலா, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனு - விசாரணை மீண்டும் தொடர்கிறது

-மதியம் 2.30 மணிக்கு வாதத்தை ஒத்தி வைத்தது ஹைகோர்ட்

-மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் வாதம் செய்து வருகிறார்

-ஒரு மணிநேரம் நடந்த ஜெயலலிதா ஜாமீன் மனு விவாதம்

-சென்னையில் கன்னடர்களை மிரட்டும் வகையில் அதிமுகவினர் போஸ்டர் வைத்த சம்பவம் எதிரொலி

-சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜை போனில் தொடர்புகொண்ட பெங்களூர் போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி

-கன்னடர்களுக்கு பாதுகாப்பு தருமாறு ஜார்ஜிடம் கேட்டுக்கொண்ட எம்.என்.ரெட்டி

-ஜெயலலிதாவிடமுள்ள நகைகள் 1971ம் ஆண்டில் பெற்றோரிடமிருந்து வந்தது

-குடும்ப நகை என்ற வாதத்தை சிறப்பு நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை-ஜெத்மலானி வாதம்

-ஜெயலலிதா சட்டத்தை மதிக்கும் பெண்மணி, கோர்ட் கூறியபோதெல்லாம் நேரில் ஆஜராகியுள்ளார்-ஜெத்மலானி

-ஜெயலலிதாவின் உடல் நலம் சரியில்லை என்பதையும் பரிசீலித்து ஜாமீன் வழங்க வேண்டும்

-லில்லிதாமஸ், ரவி பாட்டீல் வழக்குகளில் தண்டனையை நிறுத்தி ஜாமீன் வழங்கிய உதாரணம் உள்ளது-ஜெத்மலானி

-லாலு பிரசாத் வழக்கை மேற்கோள் காட்டி வாதிட்ட ராம்ஜேத்மலானி

-5 ஆண்டு தண்டனை பெற்ற லாலுவுக்கு ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்

-அதேபோல ஜெயலலிதாவையும் விடுவிக்க ராம்ஜேத்மலானி கோரிக்கை

-ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு மீதான ராம் ஜெத்மலானியின் வாதம் நிறைவு

-சசிகலா ஜாமீன் மனு வாதம் தொடங்கியது

-ராம்ஜேத்மலானி வாதம் முடிந்தது - பவானி சிங் வாதம் தொடங்கியது

-ஜாமீன் வழக்கு விசாரணை நடைபெறும் கர்நாடக ஹைகோர்ட் ஹாலுக்குள் அதிமுகவினர் கூச்சல், குழப்பம்

-அதிமுகவினர் கூச்சலால் ஜாமீன் மனுவை விசாரிக்கும் நீதிபதி சந்திரசேகர் கோபம்

-வழக்கிற்கு தேவையற்றவர்களை வெளியே அனுப்ப நீதிபதி உத்தரவு

-தண்டனையை ரத்து செய்ய கோரும் விசாரணை தாமதம் ஆகும் என்பதால் ஜாமீன் தர வேண்டும்- ஜெத்மலானி

-ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா எங்கும் தலைமறைவாகிவிட மாட்டார்- ஜேத்மலானி

-4 வருட தண்டனை என்பதால் அரசுக் கருத்தைக் கேட்கத் தேவையில்லை

-அரசுத் தரப்பு கருத்தைக் கேட்காமலேயே ஜாமீனில் விடுவிக்கலாம்- ராம்ஜேத்மலானி வாதம்

-ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் பவானிசிங் எதிர்ப்பு

-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது

-ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும், அடுத்தகட்ட விசாரணை அங்கே நடக்க வேண்டும்

-கர்நாடக ஹைகோர்ட் பதிவாளரிடம் கர்நாடக சட்ட பாதுகாப்பு கமிட்டி சார்பில் மனு தாக்கல்

-கர்நாடகாவில் அதிமுகவினரால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுவதால் ஹைகோர்ட் தலையிட கோரிக்கை

-ஜெயலலிதா வழக்கை அவசர வழக்காக எடுக்க முடியாது

-வரிசைப்படியே விசாரணை நடைபெறும் என நீதிபதி அறிவிப்பு

-ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம்

-ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் முடிவு

-நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மூத்த வக்கீல் தர்மபால் தலைமையிலான வக்கீல்கள் குழு தயார்

-நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவது குறித்து கர்நாடக அட்வகேட் ஜெனரலிடம் கருத்து கேட்கிறது வக்கீல் குழு

-ஜெயலலிதா ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

-சிறை வளாகத்தில் குவிந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தொண்டர்கள்

-சிறை வளாகத்தில் 1500 போலீசார் குவிப்பு

-காலையிலேயே ஜாமீன் மனு விசாரணையை எடுக்க கோரிக்கைவிடுக்க ஜெயலலிதா வக்கீல்கள் முடிவு

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+