For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7-வது முறையாக அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்...கோவில்பட்டியில் வைகோவுக்கு எதிராக கடம்பூர் ராஜூ போட்டி

Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க. வேட்பாளர்கள் 8 பேரை மாற்றம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தலில், 234 தொகுதிகளுக்கும் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, கடந்த 4ம் தேதி ஜெயலலிதா வெளியிட்டார். அந்தப் பட்டியலில், புதுமுகங்களுக்கு அதிக அளவு வாய்ப்பு வழங்கப்பட்டு இருந்தது. அதோடு, அவர்களில் பெரும்பாலானோர் புகார்களுக்கு ஆளானவர்கள் என்பதால், அத்தகைய வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என கட்சியினர் புகார் மனு அளிக்கத் தொடங்கினர்.

Jayalalithaa changes 8 AIADMK candidates in Tamil Nadu

அதனைத் தொடர்ந்து, வேட்பாளர் மாற்றம் தொடங்கியது. இதுவரை 6க்கும் அதிகமான முறை வேட்பாளர்களை மாற்றியுள்ளார் ஜெயலலிதா.

இந்நிலையில் தற்போது புதிதாக 8 வேட்பாளர்களை மாற்றியுள்ளார். அதன் விபரமாவது:-

திருச்சி கிழக்கு : தமிழரசிக்கு பதில் வெல்லமண்டி நடராஜன்

அரக்கோணம் : கோ.சி.மணிவண்ணனுக்கு பதில் சு.ரவி

பாப்பிரெட்டிபட்டி : குப்புசாமிக்கு பதில் பி,பழனியப்பன்

ஈரோடு மேற்கு : வரதராஜனுக்கு பதில் கே.வி.ராமலிங்கம்

கோவில்பட்டி : ராமனுஜன் கணேஷ்க்கு பதில் கடம்பூர் ராஜூ

சங்கராபுரம் : ராஜசேகருக்கு பதில் ப.மோகன்

ஸ்ரீவைகுண்டம் : புவனேஸ்வரனுக்கு பதில் எஸ்.பி.சண்முகநாதன்

பாளையங்கோட்டை - எஸ்.கே.ஏ.ஹைதர் அலி

English summary
AIADMK general secretary and Tamil Nadu Chief Minister Jayalalithaa changed 8 more nominees for the May 16 Assembly elections in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X