ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய போது கண்ணீர் விட்டு கதறி அழுத ஓபிஎஸ்- வைரல் வீடியோ
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ராஜாஜி அரங்கில் அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுத காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
சென்னை: உடல்நலக்குறைவினால் 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா, கடந்த 5ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்திய போது பணிவு காணமல் போய்விட்டதாக பலரும் குற்றம் சாட்டினர்.
ஊடகங்களிலும் செய்தி வெளியானது. சமூக வலைதளங்களிலும் பலரும் பதிவிட்டனர். பதவியேற்ற போது பலரும் கண் கலங்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் முதன் முதலாக மலர்வளையம் வைத்து ஜெயலலிதாவின் பாதத்தில் குனிந்து அஞ்சலி செலுத்திய போது கதறி அழுத காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும்,சசிகலா நடராஜன் அதிமுக தலைமைப் பொறுப்புக்கு வருவதை விரும்பாத அதிமுக தொண்டர்களும் இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். இவர்தான் உண்மையான விசுவாசி என்று கூறி வருகின்றனர். ஓபிஎஸ் அழுவதைப் பார்த்து பிற அமைச்சர்களும் கண் கலங்கி அமர்ந்துள்ள வீடியோ காட்சி தற்போது வெளியாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த வீடியோ வெளியாகவில்லை.
அதே நேரத்தில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் தொலைக்காட்சிகள், ஓ.பன்னீர் செல்வத்தின் அழுகையையும், விசுவாசத்தையும் திட்டமிட்டு மறைத்து விட்டதா?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications