அப்பல்லோவில் ஜெயலலிதாவை நேரில் பார்த்தேன்- டிரைவர் கண்ணன்
அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்த்ததாக டிரைவர் கண்ணன் கூறியுள்ளார்.
Recommended Video

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்த போது நேரில் பார்த்தேன் என்று ஜெ.வின் கார் டிரைவர் கண்ணன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.
அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

விசாரணை கமிஷன்
சென்னை எழிலகத்தில் அமைந்துள்ள விசாரணைக் கமிஷனில் தினமும் விசாரணை நடந்துவருகிறது. முன்னாள் இந்நாள் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் என அவரின் மரணத்தில் தொடர்புடைய அனைவரும் ஆஜராகி விளக்கம் அளித்துவருகின்றனர்.

விளக்கம் அளித்த டிரைவர்
கடந்த மாதம் ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் ராஜம்மாள் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில், அவரது கார் டிரைவராக இருந்த ஐயப்பன் அதே நாளில் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். ஆறுமுகசாமி முன்பு ஆஜரான அவர், நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு அவர் விளக்கமாக பதில் அளித்தார். அவரது வாக்கு மூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டது.

ஜெயலலிதாவை பார்த்தேன்
இந்த நிலையில் மற்றொரு கார் டிரைவர் கண்ணன் இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5வது நாள் ஜெயலலிதாவை பார்த்ததாக கண்ணன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

காரில் சென்றேன்
செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன் செப்டம்பர் 22ஆம் தேதியன்று ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது காரில் பின்னால் சென்றதாகவும் கூறினார். 1991ம் ஆண்டு முதல் ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications