அதிமுக சட்டசபைக்குழு தலைவராக ஜெயலலிதா தேர்வு!
சென்னை: அதிமுக சட்டசபைக் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் ஜெயலலிதா.
தமிழக சட்டசபைக்கு கடந்த 16ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனையடுத்து, வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில், 134 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.

இதனையடுத்து சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள, அதிமுக தலைமை அலுவலகத்தில்,அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜெயலலிதாவைத் தவிர கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் உட்பட 133 பேரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், எம்.எல்.ஏக்கள் அனைவரும் அதிமுக சட்டசபை குழு தலைவராக ஜெயலலிதாவை, ஒரு மனதாக தேர்வு செய்தனர். கூட்டம் முடிந்ததும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், ஜெயலலிதாவை தேர்வு செய்வதற்கான கடிதத்தை, ஆளுநரிடம் வழங்குவர். அதன்பின், அவர் ஆட்சி அமைக்க வரும்படி, ஜெயலலிதாவுக்கு அழைப்பு விடுப்பார்.
இதனையடுத்து தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதா பதவியேற்பார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அவர் பதவியேற்றுக்கொள்கிறார்.
சொத்து குவிப்பு வழக்கில் பதவியை இழந்த முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு இதே மே மாதம் 23ம் தேதி தமிழக முதல்வராக 5வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications