முதல்வர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் பேச்சு... ஸ்டாலின் மீது அவதூறு வழக்குப் பதிவு
சென்னை: தமிழக சட்டசபைக் கூட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அவர் மீது அவதூறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், முதல்வர் ஜெயலலிதாவின் சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் நேற்று அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 22-ந்தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் இருந்து வெளியில் வந்த தி.மு.க. பொருளாளரும், எம்.எல்.ஏ.வுமான மு.க. ஸ்டாலின் பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், சட்டசபைக்கு நாங்கள் (தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்) வருவதை முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. சபாநாயகர் சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.
ஸ்டாலின் கூறிய இந்த குற்றச்சாட்டு, உள்நோக்கமானது. முதலமைச்சருக்கு சமுதாயத்தில் உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவர் பேசியுள்ளார். எனவே, அவர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications