ஜெ. உடல்நிலை குறித்த டிராபிக் ராமசாமி வழக்கு டிஸ்மிஸ்... 'பப்ளிசிட்டி' என ஹைகோர்ட் கண்டனம்!
சென்னை : முதல்வர் ஜெயலலிதாவின் உடல் தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றக்கூடாது என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த 15 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு என்று கூறப்பட்ட நிலையில் தற்போது நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

முதல்வர் உடல்நிலை
முதல்வரின் உடல்நிலை குறித்து இதுவரை 5க்கும் மேற்பட்ட அறிக்கைகளை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனிடையே முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. அரசாங்கத்தின் சார்பில் இதுவரை எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

டிராபிக் ராமசாமி மனு
இந்தப் பிரச்னையை கையில் எடுத்த, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், "தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ஆயிரம்விளக்கு, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வு பாதிப்பு உள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தொடக்கத்தில் அறிவித்தது.

டாக்டர்கள் பேட்டி
2 நாட்களுக்கு பிறகு, டாக்டர்கள் அளித்த பேட்டியில், முதல்வர் நலமாக உள்ளார், 2 நாட்களில் வீடு திரும்பி விடுவார், அவருக்கு ஓய்வு தேவை' என்றனர். ஆனால் திடீரென்று லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்து மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் ஜான் வந்து அப்போலோ மருத்துவமனையில் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார். முதல்வருக்கு என்ன நோய் பாதிப்பு என்பதை இதுவரை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.

பரவிய வதந்திகள்
இந்த நிலையில், முதல்வருடைய உடல்நிலை பற்றி தெரிந்து கொள்ள மக்களும், அரசியல் தலைவர்களும் விரும்புகின்றனர். அதிமுகவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும், மருத்துவமனை முன்பு பூஜைகள் நடத்த போலீசார் அனுமதிக்கின்றனர். மருத்துவமனைக்கு பொதுமக்கள் சென்றாலும் தடுக்கிறார்கள். முதல்வரின் உடல்நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப், வார பத்திரிகைகளில் பல புரளிகள் கிளப்பப்பட்டு வருகிறது. பல இடங்களில் திடீர் திடீரென கடைகள் மூடப்படுகின்றன என குறிப்பிட்டிருந்தார்.

தற்காலிக முதல்வர்
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்த உண்மையான அறிக்கையை வெளியிட வேண்டும். முதல்வரின் உடல்நிலை சரியாகும் வரை தற்காலிக முதல்வரை தமிழக ஆளுநர் நியமனம் செய்ய வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி குறிப்பிட்டிருந்தார்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள்
கடந்த 4ம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில், டிராபிக் ராமசாமி தன் மனுவை விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார். அதைக்கேட்ட நீதிபதிகள், ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பவர், அந்த மாநில மக்களின் பிரதிநிதி. அதனால் அவரது உடல்நிலை குறித்து, பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் கடமையும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு உள்ளது என்று கருத்து தெரிவித்தனர்.

நீதிமன்றத்தில் விசாரணை
அப்போது குறுக்கிட்ட அரசு வழக்கறிஞர்கள், இதுகுறித்து பதில் அளிக்க தங்களுக்கு போதிய அவகசாம் வேண்டும் என்று கேட்டனர். அதை ஏற்றுக் கொண்டு முதல்வரின் உடல் நிலை பற்றிய தகவலைப் பெற்று அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். வழக்கை நீதிபதிகள் வழக்கை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மனு தள்ளுபடி
இன்று இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமைநீதிபதி அடங்கிய அமர்வு, மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று கூறி தள்ளுபடி செய்தார். முதல்வரின் உடல்நிலை குறித்து தினசரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடும் அறிக்கையை மனுதாரர் பார்ப்பதில்லையா என்று கேட்ட நீதிபதி, விளம்பரம் தேடுவதற்காக இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யக்கூடாது என்றனர். நீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்றக்கூடாது என்றும் டிராபிக் ராமசாமிக்கு தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications