லோக்சபா தேர்தல்: நாளை முதல் ஜெயலலிதா சூறாவளி பிரசாரம்
சென்னை: அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா நாளை முதல் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்குகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கடந்த 24-ந் தேதி ஜெயலலிதா அறிவித்தார். 25ந் தேதி அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அப்போதே தேர்தல் பிரசார சுற்றுப் பயணத் திட்டத்தையும் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளை தனது தேர்தல் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் ஜெயலலிதா தொடங்குகிறார். இதற்காக நாளை பகல் 2.30 மணியளவில் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார். நசரத்பேட்டையில் ஹெலிகாப்டரில் இறங்கி கார் மூலம், காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு செல்கிறார்.
காஞ்சிபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பேசுகிறார். பின்னர் பொதுக்கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டரில் சென்னை திரும்புகிறார்.
முதல்வர் ஜெயலலிதா காஞ்சிபுரம் தேர்தல் பிரசாரத்துக்கு வருவதையொட்டி அவரது ஹெலிகாப்டர் இறங்கும் நசரத்பேட்டையில் இருந்து காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வரை கொடி தோரணங்கள் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. வாழை மர தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் மைத்ரேயன் எம்.பி. மேற்பார்வையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications