நல்ல தீர்ப்பு... குடும்ப ஆட்சி கொண்டு வர நினைத்தவர்களுக்கு முடிவு- ஜெ.தீபா
நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கூறியுள்ளார். சிறைக்கு செல்ல வேண்டியவர்கள் இப்போது செல்லப்போகிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளளார். இந்திய நீதித்துறை சரியான தீர்ப்பு வழங்கியுள்ளதாகவும் தீபா கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் தலைமையை பிடிக்காதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்களாக மாறினார்கள். தீபா வீட்டில் தினசரியும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர். தீபா கடந்த 2 மாதங்களாகவே ஊடகங்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார். தன்னை சந்திக்க வரும் ஆதரவாளர்களிடம் பேசி அரசியலுக்கு வருவேன் என்று கூறி வருகிறார்.

தனது அரசியல் பயணத்தை கடந்த மாதம் 17ஆம்தேதி தொடங்கினார். புதிய கட்சி தொடங்குவதா? அல்லது அ.தி.மு.க.வில் சேருவதா? என்பதை வருகிற 24ஆம்தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளில் அறிவிக்கப் போவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக் ப்பட்டதால் தீபா வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். அப்போது தீபா பால்கனிக்கு வந்து தொண்டர்களை பார்த்து கையசைத்து விட்டு மகிழ்ச்சியுடன் வீட்டுக்குள் சென்றார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தீபா, நீண்ட நாட்கள் கழித்து இந்த நல்ல தீர்ப்பு வந்து உள்ளது. சசிகலாவுக்கு வழங்கபட்ட தீர்ப்பை வரவேற்கிறேன். என்றார். இந்திய நீதித்துறை மிகமுக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலம் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. இதேபோல ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் மீதான நீக்க நடவடிக்கை கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் உள்ளது என்பதை காட்டுகிறது. ஓ பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன்.ஆனால் ஆதரவு குறித்து பின்னர் முடிவு எடுப்பேன் என்றும் தீபா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications