இந்தியாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜெ.தான்: அதிமுக பொதுக்குழு
சென்னை: இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற ஆட்சியை வழங்கும் திறமை உடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதான் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவில் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதாவின் நீண்ட நெடிய அனுபவம் காரணமாக, தமிழகம் பல்வேறு துறைகளில் எடுத்துக்காட்டான மாநிலமாக விளங்குகிறது. தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

இலங்கை, அமெரிக்கா, சீனா விவகாரங்கள்..
இலங்கைத் தமிழர்களின் சம உரிமைக்காகவும் நீதிக்காகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்திய நாட்டின் நலனுக்கு விரோதமான இந்திய அமெரிக்க எரிசக்தி ஒப்பந்தம், சீனாவின் ஊடுருவல், தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அராஜகச் செயல்கள் ஆகியவற்றை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா.

மாநில உரிமைகள் காப்பவர்
அவர் இந்திய கலாச்சாரத்தின் பன்முகத் தன்மையை மதிப்பவர். இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் காப்பாற்றுவதன் வழியாகவே, ஒன்றுபட்ட இந்தியா வலிமையோடு திகழ முடியும் என்பதில் அசைக்க முடியாதநம்பிக்கை கொண்டவர். இளைய தலைமுறையினர் ஊக்குவிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு சம வாய்ப்பு தரப்பட வேண்டும், அதன் வழியாக இந்திய நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதில் மிகுந்த உறுதியுடன் இருப்பவர்

ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜெ.தான்
இந்திய நாட்டுக்கு உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களிலிருந்து பிரதமர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தற்போது தமிழகத்திலிருந்து ஒருவர் தலைமை ஏற்க காலம் கனிந்திருக்கிறது. இந்தியாவின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற ஆட்சியை வழங்கும் திறமை உடைய ஒரே நம்பிக்கை நட்சத்திரம், எம்.ஜி.ஆரின் பூரண நல்லாசியைப் பெற்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

இந்தியாவை வல்லரசாக மாற்றுவார் ஜெ.
உலக அரங்கில், இந்தியாவை தலை நிமிரச் செய்யும் நிர்வாகத்தை வழங்கும் ஆற்றல், முதல்வர் ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. உலகப் பெரும் ஜனநாயக நாடான இந்தியாவை வல்லரசாக மாற்றுவதற்கு, அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

40-லும் தனித்து வெல்வோம்
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல், இந்திய நாட்டு வரலாற்றில் மிக இன்றியமையாத தேர்தலாக அமையும். ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு, கறுப்புப்பண பதுக்கல் போன்றவற்றால், இந்தியப் பொருளாதாரம் சீர்குலைந்து ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் அதிமுக முழுமையான வெற்றி பெற்றால் மட்டுமே, தேசத்தின் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய இயலும். எனவே, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு உள்பட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளிலும், அதிமுக தனித்து நின்று வெற்றி பெற வேண்டுமென்பதே நமது இலக்கு.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications