ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு… கர்நாடகத்தில் உள்ள 21,280 கிராம் தங்கம் என்னவாகும்?
ஜெயலலிதாவிற்கு சொந்தமான 21,280 கிராம் தங்கம் கர்நாடக கருவூலத்தில் உள்ளது.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் 21 ஆயிரத்து 280 கிராம் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் உள்ளது.
ஜெயலலிதாவின் மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, அது தொடர்பான அவரது தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜெயலலிதா கொடுத்துள்ள உறுதிமொழி பத்திரத்தின் படி, 21 ஆயிரத்து 280 கிராம் தங்கம் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சொத்துக் குவிப்பு வழக்கில் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை.
இதுதவிர, ஜெயலலிதா கொடுத்துள்ள உறுதிமொழி பத்திரத்தின் படி, 1,250 கிராம் வெள்ளி பொருட்களும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு, 3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் என்று மதிப்பிடப்பட்டது. இந்த வெள்ளிப் பொருட்களும் கர்நாடக கருவூலத்தில் உள்ளன.
கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது மேல் முறையீடு செய்யப்பட்டு, கர்நாடக ஐகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்தது.
என்றாலும், ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை பொருத்தே 21 ஆயிரத்து 280 கிராம் தங்கமும், 3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளியும் தமிழ்நாட்டின் கருவூலத்திற்கு வந்து சேரும்.
இது தவிர, உறுதிமொழி பத்திரத்தில் உள்ளபடி ஜெயலலிதாவின் சொத்து விவரம்:
• 113 கோடியே 73 லட்சத்து 38 ஆயிரத்து 586 ரூபாய் சொத்து மதிப்பு
• கடன் மதிப்பு 2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987 ரூபாய்
• கையில் உள்ள பணத்தின் மதிப்பு ரூ. 41,000
• அம்பாசிடர் கார் மதிப்பு ரூ. 10,000
• மகிந்திரா ஜீப் மதிப்பு ரூ. 10,000
• மகிந்திரா போலேரோ மதிப்பு ரூ. 80,000
• டெம்போ டிராவலர் மதிப்பு ரூ. 80,000
• ஸ்வராஜ் மஸ்டா மேக்சி மதிப்பு ரூ. 10,000
• காண்டசா மதிப்பு ரூ. 5,000
• டெம்போ ட்ராக்ஸ் ரூ. 30,000
• டொயாட்டோ ப்ரடோஸ் ரூ. 20 லட்சம்
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications