ஜெயலலிதா சென்ற ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும்படை
கோவை: கோவையில் பிரச்சாரம் செய்ய வந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் காரையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அவர் பிரச்சாரம் செய்ய முதல்வர் ஜெயலலிதா செல்லும் ஹெலிகாப்டர், கார் மற்றும் அவருடன் செல்லும் வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய நேற்று மதியம் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய அவர் கார் மூலம் பிரச்சார கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றார். இந்நிலையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி பார்த்திபன் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள், பொள்ளாச்சி தாசில்தார் சண்முகராஜ் ஆகியோர் ஜெயலலிதா வந்த ஹெலிகாப்டரை சோதனை செய்தனர். சுமார் 10 நிமிடம் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.
இது குறித்து தாசில்தார் சண்முகராஜ் கூறுகையில்,
ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சி வாகனங்களையும் சோதனை செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படியே ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை சோதனை செய்தோம். அதில் எந்த பொருளும் கிடைக்கவில்லை என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications