ஜெயலலிதா சொத்து ரத்த உறவுகளுக்கே சொந்தம்.. இந்து என்.ராம்
ஜெயலலிதாவின் சொத்துக்கள் ரத்த உறவுகளுக்கே சொந்தம் என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் தெரிவித்துள்ளார்.
சென்னை: மறைந்த ஜெயலலிதாவின் சொத்து அவரது ரத்த சொந்தங்களுக்கு தான் சொந்தம் என மூத்த பத்திரிகையாளரான இந்து என்.ராம் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஆட்சி அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்தினார் சசிகலா. இதற்கு மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர் இந்து ராம். அரசியல் சாசனத்துக்கு அப்பாலான சக்திகள் அரசாங்கத்தை வழிநடத்தக் கூடாது என ராம் கூறியிருந்தார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்று சசிகலாவை அக்கட்சி நிர்வாகிகள், மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கும் இந்து ராம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
குறிப்பாக, சசிகலாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் இருந்தாலும், அதை நம்பி குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தால், அது பேரழிவான ஓர் ஏற்பாடாக முடியும் எனவும் எச்சரித்திருந்தார் இந்து ராம். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு திடீரென போயஸ் கார்டனுக்கு சென்ற இந்து ராம் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார்.
If Jayalalithaa died intestate, i.e., left no will, her properties will, by law, go to her surviving blood relatives -- her niece & nephew. https://t.co/H4JieHD2Fy
— N. Ram (@nramind) December 16, 2016
இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொத்து அவரது ரத்த உறவுகளுக்கு தான் சொந்தம் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்து ராம்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications