நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் 10 பேரை மீட்க நடவடிக்கை - ஜெ.,
சென்னை: நேபாளத்தில் நிலச்சரிவில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்துவரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த 19 பேர் கடந்த 20 ஆம் தேதி நேபாளத்திற்கு யாத்திரை சென்றனர். இந்த நிலையில் காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியைச் சேர்ந்த கோபி (வயது 40) என்பவர் தலைமையில், காஞ்சிபுரத்தில் இருந்து கடந்த 20-ந் தேதி 17 பேர் நேபாளத்தில் உள்ள முக்திநாத் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
இதனிடையே நேபாளத்தில் திடீரென கனமழை பெய்ததால் நிலச்சரிவு ஏற்பட்டது. 7 பேர் மட்டும் நிலச்சரிவிற்கு முன்பே இந்திய எல்லைக்குள் வந்துவிட்டனர். 10 பேர் நிலச்சரிவு பகுதியில் சிக்கி கொண்டனர். அங்கிருந்து வர முடியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் 10 பேரை மீட்க முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழகத்தை சேர்ந்த 10 பேரை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தமிழர்கள் அனைவரும் சென்னை திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை ஹலிகாப்டர் மூலம் மீட்டு கொண்டு வருவதற்கு ரூ.2.10 லட்சத்தை இந்திய தூதரகத்திற்கு செலுத்தவும் தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications