69-வது சுதந்திர தினம்: சென்னை கோட்டையில் முதல்வர் ஜெ. கொடி ஏற்றினார்... 10 நிமிடம் மட்டுமே உரை!
சென்னை: நாட்டின் 69-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று காலை கொடி ஏற்றி வைத்தார். அதன் பின்னர் அப்துல்கலாம் விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
நாட்டின் சுதந்திரதின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
முதலில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த போர் வீரர்களின் நினைவிடமான சென்னை கடற்கரை சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் முதல்வர் ஜெயலலிதா.
போர் நினைவுச் சின்னத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா புனித ஜார்ஜ் கோட்டையின் நுழைவு வாயிலை காலை 8.45 மணியளவில் வந்தடைந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வரவேற்றார்.
இதன்பின், முப்படைகளின் தென் பிராந்தியத் தலைவர்கள், தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்வருக்கு மரபுப்படி அறிமுகம் செய்து வைத்தார் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன்.
இதன் பின் முப்படையினரின் மற்றும் காவல் துறையினரின் சம்பிரதாய அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் திறந்த ஜீப்பில் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு கோட்டை கொத்தளத்துக்குச் சென்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.

சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார். இதைத்தொடர்ந்து பல்வேறு விருதுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். தமிழகத்தில் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இஸ்ரோ திட்ட இயக்குநர் வளர்மத்திக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
உட்கார்ந்தபடியே...

சட்டசபையிலும் பொதுக்கூட்டங்களிலும் நின்றபடி உரையாற்றும் முதல்வர் ஜெயலலிதா இன்று நாற்காலியில் உட்கார்ந்தபடியே உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications