ஆடியில் ஆரம்பித்த வேட்டை..சின்னம்மா ரிட்டர்ன்ஸ்! தென்காசியை கவனித்த எடப்பாடி.. போஸ்டரை பாத்தீங்களா?
தென்காசி: அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலா இன்று தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அம்மாவின் வழி மக்கள் பயணத்தை தொடங்கும் அவருக்கு நேற்று மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவரை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளது. இதனிடையே சசிகலாவின் பயணம் வெற்றிப் பயணமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது நிழலாகவே இருந்தவர் சசிகலா. ஜெயலலிதாவின் தோழி என நீண்ட காலமாக அவருடன் பயணித்தவர். அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலாவின் பங்கு மிகப் பெரியது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒட்டுமொத்த நிர்வாகிகளும் சசிகலாவை நேரில் சந்தித்து அவர் கட்சியை வழிநடத்த வேண்டும் என்றனர். பிறகு ஆட்சியையும் அவர்தான் வழிநடத்த வேண்டும் என கூறினர். அந்த அளவுக்கு அவரது செல்வாக்கு இருந்தது.
இதனால் ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை தொடங்க கூவத்தூரில் பல்வேறு கூத்துகள் அரங்கேறின. ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல நேர்ந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆக்கப்பட்டார். அதற்கு பிறகு அவராலேயே சசிகலா கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டார். சிறையில் இருந்து வெளிவந்த அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்த்து நிலையில் கட்சியின் நலன் கருதி அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்வதாக தெரிவித்து இருந்தார்.
ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. இதை அடுத்து மீண்டும் அரசியலில் என்ட்ரி கொடுக்கப் போவதாக சொன்ன சசிகலா, முதற்கட்டமாக திருவள்ளூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்திருக்கும் நிலையில் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறி வருகிறார்.
இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது. குறிப்பாக நேற்று ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில் சசிகலாவை சேர்க்காவிட்டால் முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்காது. மேலும் தேர்தலில் அதிமுகவினர் சமுதாய அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வத்துக்காக வேலை செய்தனர். எனவே அனைவரையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் தென்காசியில் இருந்து அம்மாவின் வழி மக்கள் பயணத்தை இன்று தொடங்குகிறார் சசிகலா. நான்கு நாட்கள் அங்கு தங்கி இருந்து நகர், ஒன்றிய, கிளைக் கழக அளவிலான நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான திட்டங்களை அவரது சகோதரரான திவாகரன் வகுத்துக் கொடுத்திருக்கிறார். மேலும் அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு டிடிவி தினகரன் பேசியிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுகவில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை அறிக்கைகள் சுற்றுப்பயணம் என சசிகலா அரசியலில் அடிக்கடி என்ட்ரி கொடுத்துக் கொண்டிருந்தாலும் அது பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. ஆனால் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இடமே வலியுறுத்தும் அளவுக்கு அதிமுக விவகாரம் பெரிதாகி இருக்கும் நிலையில் சசிகலாவின் சுற்றுப்பயணம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் செல்வாக்கு அதிகம் இருக்கும் மாவட்டங்களை குறி வைத்து சசிகலாவின் பயணத்திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சில முக்கிய நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தென்காசி செல்வதற்காக நேற்று மதுரை விமான நிலையம் வந்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான நிர்வாகிகள் திரண்டு வந்து புரட்சித்தாய் சின்னம்மா வாழ்க என்ற முழக்கத்தோடு அவரை வரவேற்றனர். மேலும் மதுரையின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு இருக்கிறது. சசிகலா மதுரை வருவதை ஒட்டி அவருடைய ஆதரவாளர்கள் சார்பில் "ஆட்டம் போட்ட கூட்டம் ஆடி அடங்கிவிட்டது. ஆடியில் தொடங்குகிறது சின்னம்மாவின் பரி வேட்டை " அதிமுக மதுரை மாவட்டம் என போஸ்டர் விரகனூர், சிந்தாமணி, பெருங்குடி பகுதியில் ஒட்டப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
அதிமுகவுக்கு அந்த 50 இடங்கள் இடிக்குதே? உள்குத்து டேஞ்சர்! எடப்பாடி இதை செய்தாலே போதுமே -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications