விடிகாலையில் அலறிய மனைவி.. பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை காணோம்.. சிக்கியது "வீடியோ"..!

கொடைக்கானலில் ஏரியில் குதித்து ஜீப் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: வீட்டில் தூங்கி கொண்டிருந்த கணவரை திடீரென காணவில்லை.. இதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது.. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணையிலும் இறங்கி உள்ளனர்..!

கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெசீந்திரன்... 44 வயதாகிறது.. இவர் ஒரு ஜீப் டிரைவர்.. கொடைக்கானல் பகுதியில் முக்கிய அறிவிப்புகள் ஏதாவது நடந்தால், அதை தண்டோரா போட்டு சொல்வது வழக்கம்.. ஜீப் மூலம் தண்டோரா அறிவிக்கும் பணியை இவர்தான் அங்கு செய்து வந்தார்.

வேளாங்கண்ணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள்.. இந்நிலையில் இரவு சாப்பிட்டுவிட்டு வழக்கம்போல் தூங்க போயுள்ளார்..

மாயம்

மாயம்

ஆனால் விடிகாலையில் மனைவி திடீரென கண்விழித்தபோது, அவரை காணவில்லை.. யாரிடமும் சொல்லாமல் ஜெசீந்திரன் எங்கோ கிளம்பி சென்றுவிட்டிருந்தார்.. வெளியில் இருந்த ஜீப்பையும் காணவில்லை. இதனால், மனைவி வேளாங்கண்ணி, கணவரை தேடியுள்ளார். ரூமில் செல்போன் மட்டும் இருந்தது.. அதில் ஒரு வீடியோ போட்டு வைத்திருந்தார் ஜெசீந்திரன்..

வீடியோ

வீடியோ

அந்த வீடியோவை வேளாங்கண்ணி ஆன் செய்து பார்த்தார்.. அதில், அளவுக்கு அதிகமான மன உளைச்சலில் இருக்கிறேன்.. அதனால் தற்கொலை செய்து கொள்ள போகிறேன்.. இந்தமுடிவுக்கு என்னுடைய குடும்பத்தார்களோ, உறவினர்களோ யாரும் காரணம் இல்லை.. என் மனைவி, மகன், மகளை தயவுசெய்து நன்றாக பார்த்து கொள்ளுங்கள்" என்று உருக்கமாக பேசி வைத்திருந்தார்.

 ஆண் பிணம்

ஆண் பிணம்

தனது இந்த முடிவுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் யாரும் காரணம் இல்லை என்றும், எனது மனைவி, மகன், மகளை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் உருக்கமாக பேசியிருந்தார். இதை பார்த்து ஷாக் ஆன வேளாங்கண்ணி, சொந்தக்காரர்களை அழைத்து கொண்டு பல இடங்களில் தேடி சென்றார். இந்த சமயத்தில்தான், நட்சத்திர ஏரியில் ஒரு ஆண் பிணம் மிதப்பாக கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது...

தற்கொலை

தற்கொலை

அதன்பேரில் போலீசார், தீயணைப்பு படைவீரர்களுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றுனர்.. சடலத்தையும் மீட்டனர்.. அப்போதுதான், அது ஜெசீந்திரனின் சடலம் என்பது உறுதியானது.. விடிகாலை வீட்டில் இருந்து வந்தவர், ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது..

 போஸ்ட் மார்ட்டம்

போஸ்ட் மார்ட்டம்

இதையடுத்து, போஸ்ட் மார்ட்டத்துக்கு அந்த சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. ஜெசீந்திரன் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்று இதுவரை தெரியவில்லை.. ஒரு க்ளூவும் இதுவரை கிடைக்கவில்லை.. குடும்ப பிரச்சனையும் இல்லை.. போலீசார் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் கொடைக்கானலையே அதிர வைத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+