நகைக்கடையில் திருடிய இளைஞர்கள்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நகைக்கடையில் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிய நபர்களை, சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
பள்ளிப் பாளையம் திருச்செங்கோடு சாலையில் லோகேஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்தக் கடைக்கு நேற்று பிற்பகல் வந்த இரு இளைஞர்கள், தங்களை முஸ்லிம்கள் என்றும், அதற்கு ஏற்றவாறு தங்க நகைகளை காட்டுமாறு அங்குள்ள பணியாளர்களிடம் கூறியதாக தெரிகிறது.
இதனையாடுத்து கடையில் இருந்த பணியாளர்கள் இருவரிடமும் நகைகளைக் காட்டியுள்ளனர். இந்நிலையில் விற்பனைப் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி, தங்க நகைகளை திருடுவது அங்குள்ள சிசிடிவி கேமரா-வில் பதிவாகியுள்ளது.
6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 25 சவரன் தங்க நகைகளை அவர்கள் திருடிச் சென்றதாக நகைக் கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications