பேசும் போஸ்டர்.. டெல்லி வரை திரும்பி பார்க்குது! மோடி வந்து போன அடுத்த நாளே.. அணுகுண்டு வைத்த திமுக!
சென்னை: திமுகவின் "ஜி PAY" போஸ்டர் பிரச்சாரம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தமிழகம் வந்த மோடி, திமுகவை ஊழல் கட்சி என கடுமையாக விமர்சனம் செய்த அடுத்த நாளே, பாஜகவின் ஊழல் என மோடி படத்துடன் ஹை-டெக் பிரச்சாரத்தை முன்னெடுத்து அதிரடி காட்டியுள்ளது திமுக.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. முன்னணி அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சித் தொண்டர்கள் பரபரப்புடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

திமுகவின் "பேசும் போஸ்டர்" பிரச்சாரம்: இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிக்கும் வகையில் ஹைடெக் பிரச்சார வியூகத்தை முன்னெடுத்துள்ளது திமுக. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் "ஜி PAY.. Scan பண்ணுங்க.. Scam பாருங்க" என்ற வாசகங்களுடன் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
அந்த போஸ்டர்களில் மோடி உருவத்துடன் இருக்கும் QR கோடை ஸ்கேன் செய்தால், பாஜக மீது திமுக குற்றம் சாட்டிவரும் தேர்தல் பத்திர ஊழல், சுங்கச்சாவடி முறைகேடு, பாரத்மாலா, துவாராகா விரைவு பாலம் கட்டுமானம் என பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை குறித்த விவரங்களை வெளிப்படுத்தும் வீடியோ ஓடத் தொடங்குகிறது.
மோடி பேசியது: பிரதமர் நரேந்திர மோடி கடந்த புதன்கிழமை அன்று வேலூரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்நாட்டை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சித்த அடுத்த நாள், இந்த க்யூ ஆர் கோடு போஸ்டர்கள் தமிழக சுவர்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன.
வேலூரில் மோடி பேசுகையில், "ஒட்டுமொத்த திமுகவும் ஒரு குடும்பத்தின் சொத்து. ஒட்டுமொத்த குடும்பமும் தமிழகத்தை சூறையாடுகிறது. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேறவில்லை. தமிழக கலாச்சாரத்துக்கு எதிராக திமுக செயல்படுகிறது. குடும்ப அரசியல், ஊழல் போன்றவற்றால் தமிழகத்தை திமுக பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.
திமுக ஊழல் என லிஸ்ட் போட்ட மோடி: கொள்ளை அடிப்பதிலும், ஊழலிலும் திமுக காப்பிரைட் வைத்துள்ளது. தமிழகத்தை கொள்ளையடிப்பதை தவிர திமுக குடும்பம் எந்த வேலையும் செய்வதில்லை. தமிழகத்தில் மணல் கொள்ளை மூலம் மட்டும் இரண்டு ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை மத்திய அரசு அனுப்புகிறது. ஆனால், அதை திமுக ஊழல் செய்து வருகிறது.
இன்று நமது நாடு 5ஜியில் உலக சாதனை படைத்து வருகிறது, ஆனால் திமுக 2ஜி ஊழலால் அவப்பெயரை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஊழல்வாதிகளை பாதுகாப்பதில் முன்னணியில் நிற்கின்றன. ஊழலை அகற்று என்று நான் கூறினாலும், ஊழல்வாதிகளை காப்போம் என்கிறார்கள்" என்று ஆவேசமாகப் பேசி இருந்தார் பிரதமர் மோடி.
அடுத்த நாளே திமுக அதிரடி: திமுக ஊழல்கள் என மோடி ஆவேசமாகப் பேசிய அடுத்த நாளிலேயே, க்யூ ஆர் கோடு போஸ்டர் அணுகுண்டை இறக்கியுள்ளது திமுக. "ஜி Pay.. Scan பண்ணுங்க Scam பாருங்க" போஸ்டர் தேசிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவை 40 சதவீத கமிஷன் அரசு என்று விமர்சித்து 'PayCM' 'PayMLA' போஸ்டர்களை கர்நாடகா முழுவதும் ஒட்டி கவனம் ஈர்த்தது காங்கிரஸ். இவை சசிகாந்த் செந்தில் வகுத்த தேர்தல் வியூகங்கள். முடிவில், கர்நாடகாவில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. அதே பாணியில் தற்போது பிரதமர் மோடியை டார்கெட் செய்து களமிறங்கியுள்ளது திமுக.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications