தேசத் துரோகி.. மோடி எதிரி… எச். ராஜாவுக்கு எதிராக பத்திரிகையாளர் கொந்தளிப்பு
தேசத் துரோகி, மோடி எதிரி என்று செய்தியாளர் ஒருவரை கொச்சைப்படுத்தி திட்டிய பாஜக தலைவர் எச். ராஜாவிற்கு பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக மக்களுக்கு விரோதமாகவே தொடர்ந்து செயல்பட்டு வரும் எச். ராஜாவிடம் செய்தியாளர் ஒருவர், போராடும் விவசாயிகள் குறித்து கேள்வி எழுப்பிய போது மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து அவர் கொண்டார்.
பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் செய்தியாளர் ஒருவர், விவசாயிகள் நிவாரணம் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது ஏன், கென்யா நாட்டுக்கு பல ஆயிரம் கோடி நிதி உதவி செய்துவிட்டு தமிழகத்திற்கு இவ்வளவு குறைந்த வறட்சி நிவாரணம் கொடுத்துள்ளீர்களே என்று எச். ராஜாவிடம் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியை கேட்ட உடன் கடுப்பான எச். ராஜா தேச துரோகி, மோடி எதிரி என்று கூறியதோடு, "நீங்க எவ்வளவு வரி கட்டி இருக்கிங்க.. நான் அதை திருப்பித் தருறேன் என்று அடாவடித்தனமாக பேசி அவமரியாதை செய்துள்ளார். எச். ராஜாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தேச விரோதி
மிக கொச்சையாக, அருவருப்பாக பேசியிருக்கிறார் எச்.ராஜா. விவசாயிகளை ஏன் பிரதமர் பார்க்கவில்லை என்று தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு வெள்ளக்காரியை (சோனியா காந்தி) எதிர்த்து ஏன் அவங்க போராடல, நீங்க எல்லாம் மோடி எதிரிகள், தேச விரோதிகள் என்று சொல்கிறார். ஒரு நிருபரிடம் உங்க வரிப்பணத்த நான் கொடுத்திடறேன் என்று சவால் விடுகிறார்.

பாஜகவின் லட்சணம்
இவ்வளவு அற்பத்தனமும், வன்மமும் கொண்ட ஒருவரை, அதை ஊடகவியலாளர்களிடம் மிக கேவலமாக வெளிப்படுத்தும் ஒருவரை தேசிய தலைவராக வைத்துக்கொள்வதிலிருந்தே பா.ஜ.க என்னும் கட்சியின் லட்சணம் தெரிகிறது.

வெளிச்சம் ஏன்?
ஆனால் ஊடகவியலாளர்களை கேவலமாக பேசுவதை இனியும் ஏன் பொறுத்துக்கொள்ள வேண்டும்? கேள்விகளுக்கு பதில்களாய் ஆபாசமான வசைகளை மட்டும் கொண்டிருக்கும் ஒருவர் மீது ஏன் தொடர்ந்து ஊடக வெளிச்சம் பாய வேண்டும்?

புறக்கணிப்பு
எச்.ராஜாவை தமிழக ஊடகங்கள் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என்று கவிதா முரளிதரன் பதிவிட்டுள்ளார். இதனைபோன்று மற்ற பத்திரிகையாளர்களும் முடிவெடுத்து எச். ராஜாவை புறக்கணிக்க வேண்டும். அதற்காக பத்திரிகையாளர்கள் சங்கள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் சக பத்திரிகையாளர்கள் கோரியுள்ளனர்.
-
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications