மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுள்ளது- ஹாசினி வழக்கில் நீதிபதிகள்
மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது என்று ஹாசினி வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
Recommended Video

சென்னை: மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது என்று ஹாசினி வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொன்று உடலை எரித்தார் தஷ்வந்த். அவருக்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை அளித்தது.

மொட்டு மலராகும்
இதை எதிர்த்து தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் செங்கல்பட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அப்போது நீதிபதிகள் விமலா மற்றும் ராமதிலகம் ஆகியோர் தங்கள்து தீர்ப்பில் கூறுகையில், மொட்டு மலராகும் முன்பே சாம்பலாக்கப்பட்டுவிட்டது.

சரியானது
தஷ்வந்த செய்த குற்றத்தை விட அதை செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணம் கொடூரமானது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தூக்கு தண்டனையே சரியானது.

தூக்குத் தண்டனை
தஷ்வந்த் தூக்குக் கயிற்றில் தொங்கும் கடைசி நொடி காமத்துக்கான கடைசி நொடியாக இருக்க வேண்டும். தஷ்வந்த் செய்த குற்றத்துக்கு தூக்கு தண்டனையை தவிர வேறு தண்டனை ஈடாகாது.

திருமண வாழ்க்கை
நிரபராதியை தண்டிப்பது தவறு. அதேபோல் குற்றவாளியை தண்டிக்காமல் விடுவது அநீதி ஆகும். பாலியல் திருமண வாழ்க்கையிலும் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

பாதுகாப்பு இல்லாத..
மகிழ்ச்சியான, ஆரோக்கியமான குழந்தை பருவத்தை அனுபவிக்க அரசியல் சாசனம் உரிமை தந்துள்ளது. கொடூரத்தின் வலியை நீதிமன்றத்தின் வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாது. குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது என்று தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications