செல்லம்.. விஜய் நடிகர் என்பதால் மக்கள் ஓட்டுப் போட முட்டாள்களா? வெளுத்து வாங்கிய நடிகர் பிரகாஷ்ராஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு நடிகர் என்பதால் மக்கள் ஓட்டுப் போட முட்டாள்களா? என நடிகர் பிரகாஷ்ராஜ் கடுமையாக சாடியுள்ளார். மேலும் தனியாக இருப்பேன்; யாருடனும் கூட்டணி இல்லை என்கிற விஜய்யின் அரசியலை ஏற்கனவே பார்த்துவிட்டோம்; இனியும் பார்ப்போம் என்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

சன் நியூஸ் டிவி சேனலுக்கு நடிகர் பிரகாஷ் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். இந்த சிறப்பு நேர்காணல் நாளை காலை ஒளிபரப்பாகிறது. இந்த நேர்காணல் தொடர்பான முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் குறித்து சன் நியூஸ் தலைமை செய்தி ஆசிரியர் மு.குணசேகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

PRVI

நடிகர் விஜய் குறித்து சன் நியூஸ் டிவி சேனல் பேட்டியில் நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: அரசியலில் இளைஞர்கள், ரசிகர்கள் என்பதால் நடிகர் விஜய்க்கு ஓட்டுப்போடுவாங்களா? மக்கள் பார்ப்பாங்க..மக்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல..

நடிகர் விஜய்யுடன் இதுவரை அரசியல் பேசியதே இல்லை. நடிகர் விஜய்யுடன் நிறைய படங்களில் நடித்துள்ளேன். இப்பவும் நடிக்கிறேன். செட்டுக்குப் போகிறோம்.. நடிக்கிறோம்.. அவ்வளவுதான். ஒருவேளை அரசியல் பேச வேண்டும் என நினைக்காம் இருக்கலாம்.

நடிகர் விஜய்யின் அரசியல் பார்வை என்ன என்பது எனக்கு தெரியலை. நடிகர் விஜய்யுடன் பல படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் அரசியல் பற்றி தெரியாது.. அதனால்தான் காத்திருந்தேன். சில விஷயங்களை எதிர்க்கிறேன் என்பதற்காக மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? ஒரு விஷன் - ஒரு பார்வை வேணும் இல்லையா?

மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்ப்பேன் என்கிறார் விஜய்.. ஓகே.. நான் தனியாக இருப்பேன்.. யாருடனும் கூட்டணியில் இல்லை என்கிறார்.. நாம் இந்த அரசியலைப் பார்த்திருக்கிறோம். இனியும் பார்ப்போம். இவ்வாறு நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ்- விஜய் அரசியல்

நடிகர் பிரகாஷ்ராஜ், மத்தியில் ஆளும் பாஜக அரசை மிகக் கடுமையாக எதிர்த்து விமர்சிக்கக் கூடியவர். கர்நாடகாவில் இந்துத்துவா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கவுரி லங்கேஷ் மரணத்துக்கு நீதி கேட்டு உரத்து குரல் கொடுத்தவர்; தமிழக அரசியல் குறித்து அதிகம் விமர்சனங்களை வைக்காத போதும், ஆளும் திமுக அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறவர். நடிகர் விஜய் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக இரண்டையுமே எதிர்ப்பதாக அறிவித்திருப்பவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+