சரத்பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும்! தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு!
டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர் சரத்பிரபுவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை: டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவ கல்லூரியில் பயின்ற மாணவர் சரத்பிரபுவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, டெல்லி யூ.சி.எம்.எஸ் மருத்துவ கல்லூரியில் பயிலும் உயர்கல்வி மாணவர் சரத்பிரபு இறப்பு அதிர்ச்சியளிக்கிறது. சரத்பிரபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவர்களது பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீதி விசாரணை நடத்த வேண்டும்.
தொடர்ந்து வெளி மாநிலங்களில் பயிலும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகுவதும், தாக்கப்படுவதும், கொலை-தற்கொலை செய்யப்படுவதும் மாணவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.பல மாதங்களாக ரோஹித் வெமுலா சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று கோரிக்கையை அரசு செவி சாய்க்காமல் இருப்பது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தொடங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தும் அதற்குண்டான முயற்சியை உதாசினப்படுத்துவது தமிழக நலனை தொடர்ந்து புறக்கணிப்பதை காட்டுகிறது.மேலும் இதற்குண்டான நடவடிக்கையை துரிதப்படுத்துவதும்,தமிழகத்தில் அனைத்து விதமான ஆராய்ச்சி கல்வி நிறுவனங்களை தொடங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறோம்.
தமிழகத்திலிருந்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்களை இளைஞர் நலன் அமைச்சகம் மூலம் ஒருங்கிணைத்து அவர்களுக்குண்டான அனைத்து உதவிகளையும் செய்யும் முயற்சியை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.மேலும் இது போன்ற மர்ம மரணங்களை தடுப்பதற்கும்,வளாகங்களில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு உடனடி நடவடிக்கை குறித்து அரசு சட்டம் இயற்ற வேண்டும். சரத்பிரபு மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டியும்,அவர்களது குடும்பத்திற்கு நிவாரண உதவியை வழங்கிடவும் அரசைக் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications