குழந்தைகளோடு போராடிய பெண்கள் மீது போலீசார் அராஜகம்... கு. ராமகிருஷ்ணன் கண்டனம்
மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று திருப்பூர் சாமளாபுரத்தில் போராட்டம் நடத்தி பெண்கள் மீதான தாக்குதலுக்கு கு. ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: சாமளாபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து 5 மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், போலீசார் திடீரென போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இந்தத் தடியடியில் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. பெண்களை போலீஸ் அதிகாரி ஒருவர் ஓங்கி கன்னத்தில் அடித்து விரட்டியடித்தார்.

கண்டனம்
கட்டுக்கடங்காமல் போலீசார் நடந்து கொண்ட அடாவடித்தனத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் அராஜகம்
மேலும், அவர் பேசியதாவது: மதுக்கடையை மூட வேண்டும் என்று குழந்தைகளோடு போராடிய பெண்கள் மீது போலீசார் அராஜமாக நடந்து கொண்டுள்ளனர். மக்கள் போராட்டத்திற்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும்.
மக்களுக்காகவே அரசு
மக்களின் எண்ணத்திற்கு மாறாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்காகத்தான் அரசே தவிர அரசிற்காக மக்கள் இல்லை. மக்களுடைய நலனுக்காகவே அரசு செயல்பட வேண்டும்.
வருவாய்
மேலும், மதுக்கடைகளை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் ஆட்சி நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே, மதுக்கடைகளை மூட வேண்டும்
அரசே சிகிச்சை
போலீஸ் தாக்குதலால் படுகாயம் அடைந்தவர்கள் அனைவருக்கும் அரசே பொறுப்பேற்று அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். இதுபோல் இனியொரு முறை நடக்கக் கூடாது என்று கு. ராமகிருஷ்ணன் கூறினார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications