ரஜினியை இழுக்கும் பா.ஜ.க வின் ஆசை வெட்கமறியாது! - வீரமணி கிண்டல்!
சென்னை: ரஜினியை கட்சியில் சேர்க்க அழைப்பு விடுத்து தமிழகத்தில் காலூன்ற முயலும் பாஜகவின் ஆசை வெட்கமறியாதது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் விடுத்த அறிக்கை:
சிறையிலடைக்கப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியினர் மேற்கொண்டுவரும் போராட்டங்களை விமர்சித்துள்ளார். மேலும் "சட்டத்தினால் தண்டிக்கப்பட்டவர்கள் சட்டப்படி வெளிவர முயற்சிக்கலாமே தவிர, தீர்̃ப்பு வழங்கிய நீதிபதியை வசைபாடி, விமர்சித்து சுவரொட்டிகள், என்று பொறுப்பற்ற சிந்தனையற்ற வாசகங்களை எழுதி, வெறுப்பினை மேலும் - பல தரப்பிலும் சம்பாதிப்பது,தேவைதானா? எனக்கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒப்பாரி வைப்பதும், பேருந்துகளைக் கொளுத்துவதும், பேருந்துகளில் பயணம் செய்வோர் மண்டைகளை உடைப்பதும், கடைகளை மூடச் சொல்வதும், கடை பொருள்களைக் கொள்ளையடிப்பதும் எந்த வகையில் சரி? இவையெல்லாம் சமூக விரோத செயல்கள் அல்லவா? பள்ளிகளை மூட நிர்ப்பந்தப்படுத்துவதும், மொட்டை போட்டுக் கொள்வதும், தாடி வளர்ப்பதுமான ‘‘மழித்தலும் நீட்டலும்'' ஆன கேலிக் கூத்துக்களை அரங்கேற்றுவதும் செய்தித் தாள்களில், ஊடகங்களில் உலகம் முழுவதும் பரப்பப்படுகின்றன.
இவை எல்லாம் பெருமை தரக்கூடியவைதானா? ‘செந்தமிழ்நாடெனும் போதினிலே' என்ற பாரதி பாட்டினையே மாற்றி அல்லவா, இன்று பாடிட பகுத்தறிவுள்ள எவருக்கும் தோன்றும்! என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வீரமணி இது ஒருபுறம்; மறுபுறம் ‘எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?'' என்ற மொழிக்கேற்ப, பல அரசியல் கட்சிகள் அளவுக்கு அதிகமான ஆசையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுப்பிரமணிய சுவாமிகளின் கற்பனைக் கனவுகளும் ஒருபுறம். மறுபுறம் சினிமா நடிகர்களுக்கு பா.ஜ.க.வின் அழைப்புக்குமேல் அழைப்பு! ஆசை வெட்கமறியாது என்பதற்கேற்ப, பா.ஜ.க. எப்படி தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முனைந்து, இப்போது சினிமா ரசிகர் மன்றத்தின் மற்றொரு அங்கமாகத் தன்னை மாற்றிக்கொண்டு கொக்குத் தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும்
திட்டமிட்ட ‘அதிபுத்திசாலியாக' மாறிடத் துடியாய்த் துடிக்கிறது!
இதற்கெல்லாம் பலியாகாத இளைஞர்கள், திராவிட இயக்கத்தின் அடிநாதத்தை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ள வீரமணி இறுதியில் சிரிப்பவர் யார்? இறுதியில் சிரிப்பவர்தானே அறிவாளி? இடையில் இப்படிப்பட்ட காட்சிகளும், நகைச்சுவைக்குப் பயன்படுமே தவிர, நாடாள ஒருபோதும் கைகொடுக்காது. காலம் புரிய வைக்கக் காத்திருக்கிறது.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications