Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மெரினா முதல் குமரி வரை களைகட்டிய காணும் பொங்கல்: ஒரு சுவாரஸ்யமான ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காணும் பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாகவும், அமைதியான முறையிலும் கொண்டாடப்பட்டது.

காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மக்கள் கடற்கரை, பூங்கா, அருவிகள், சுற்றுலாத் தலங்களுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடினர்.

தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் திரும்பும் பக்கம் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை

காணும் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அண்டை மாவட்ட மக்களும் கார், வேன்களில் மெரினா கடற்கரை வந்தனர். அதனால் கடற்கரையில் மண் தெரியாத அளவுக்கு கூட்டமாக இருந்தது.

ஒரே விளையாட்டு

ஒரே விளையாட்டு

கடற்கரையில் சிறுவர் முதல் முதியவர்கள் வரை பலரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடினர். இளம்பெண்கள் கபடி விளையாடினர். கடற்கரையில் இருந்த ராட்டினத்தில் ஏறி சிறுவர்களும், பெண்களும் மகிழ்ந்தனர். சிலர் கண்ணாமூச்சி ஆடினர். வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை கடற்கரையில் அமர்ந்து மக்கள் சாப்பிட்டனர்.

பஜ்ஜி, மீன் வறுவல்

பஜ்ஜி, மீன் வறுவல்

கடற்கரையில் பஜ்ஜி, சுண்டல், மீன் விற்பனை படுஜோராக நடந்தது. அதிலும் குறிப்பாக பஜ்ஜி, மீன் வறுவலுக்கு ஆர்டர் அளித்துவிட்டு மக்கள் அரை மணிநேரம் காத்திருக்க வேண்டிய அளவுக்கு கிராக்கியாக இருந்தது.

குழந்தைகள்

குழந்தைகள்

கடற்கரையில் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க அவர்களின் கையில் செல்போன் எண் அடங்கிய சிறிய வளையத்தை போலீசார் அணிவித்தனர். இதற்காக 2 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அறைகளில் போலீசார், பெற்றோரின் எண்கள் அடங்கிய வளையங்கள் குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் இந்த வளையம் அணிவிப்பு நடந்து வருகிறது.

கண்காணிப்பு

கண்காணிப்பு

மெரினாவில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடற்கரையில் 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. போலீசார் குதிரையில் ரோந்து வந்தும் கண்காணித்தனர். கடலில் குளிக்கக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தியும் சில குசும்புக்கார இளைஞர்கள் குளித்தனர். அவர்களை போலீசார் விரட்டிவிட்டனர். எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொதுழுபோக்கு பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கிண்டியில் இருக்கும் சிறுவர் பூங்காவில் ஏராளமான சிறுவர், சிறுமிகளை காண முடிந்தது.

காதல் ஜோடிகள்

காதல் ஜோடிகள்

பூங்காக்கள், மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளை காண முடிந்தது. சிலர் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டனர். மெரினாவில் சிலர் அத்துமீறி நடந்தனர். அத்துமீறியவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். சென்னையில் மட்டும் கண்காணிப்பு பணியில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

வண்டலூர்

வண்டலூர்

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு மக்கள் காலையிலேயே வந்துவிட்டனர். அவர்கள் மாலை வரை பூங்காவில் இருந்து பொழுதை மகிழ்ச்சியாக கழித்தனர். கூட்டத்தை சமாளிக்கும் அளவுக்கு பூங்கா நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தது.

கொடைக்கானல்

கொடைக்கானல்

காணும் பொங்கலை முன்னிட்டு கொடைக்கானலிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் ஃபாரஸ்ட், குணா குகை என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது. மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

வெளிநாட்டவர்கள்

வெளிநாட்டவர்கள்

கொடைக்கானல் வில்பட்டியில் சுற்றுலாத் துறை சார்பில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.

குமரி

குமரி

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம், சூரியோதயம் காணும் இடங்களில் மக்கள் கூட்டமாக இருந்தது. மேலும் பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, சிதறால் மலைக்கோவில் ஆகிய இடங்களிலும் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+